அடியார்க்கும் அடியேன்.. இளையான்குடி மாற நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு

Su.tha Arivalagan
Mar 04, 2026,01:49 PM IST

- கலைவாணி கோபால் 


"இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்" என்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் பெருமைக்குரியவர் நமது இளையான்குடி நாயனார். 


பாண்டிய நாட்டின் வறண்ட பகுதியான சிவகங்கை பகுதியில் மழைக்காலம் தொடங்கியிருந்தது. அப்படி தொடங்கிய மழைக்காலத்தை பயன்படுத்தி வயலினை உழுது சேராக்கி விதை நெல்லை விதைத்து விட்டு மாலைப் பொழுதில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்தார் அந்த மாறனார். 


ஒரு மனிதனுக்கு மனைவியே எல்லாவற்றிற்கும் மேலான அடைக்கலம் அவன் என் மனம் மனசாட்சி என்பது போல தனது பலம் பலவீனம் கடந்த கால நினைவுகளை மனைவியிடம் ஒட்டிக் கொண்டிருந்தார் மனைவியிடம் நமது நாயனார். 


ஒரு காலத்தில் மிகப் பெறும் நிலத்துக்கு சொந்தக்காரர், ஏகப்பட்ட சொத்துக்களுக்கு அதிபதி, பல வேலை ஆட்கள் இருப்பார்கள் பண்ணை இருந்தது. அவரின் மிக முக்கிய கடமையாக அவர் கருதியது உயிரினும் மேலான சிவனடியார்களுக்கான மகேசன் பூஜை. 




மகேசன் பூஜை என்பது சிவனடியார்கள் உருவில் மகேசனைக் கண்டு அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து கை, கால் அலம்ப வைத்து அவர்களுக்கு திருநீர் கொடுத்து உபசரித்து வீதி வரை கொண்டு அவரை வழி அனுப்பி வைப்பது. எ ன்னும் அருபெரும் சிவ பணியை செய்து வந்தார்கள் ...கணவனும் மனைவியும் இவர்கள் இருவரையும் சோதனை செய்ய நினைத்த சிவபெருமான் தனது திருவிளையாடலை தொடங்கினார். 


முதலில் அவர்கள் வீட்டில் இருந்து திருமகளை விலகச் செய்தார். வறுமையிலும் அவர்கள் பணி எப்படி இருக்கும் என்பதை சோதித்துப் பார்க்க எண்ணினார். சிவன் நினைத்த மறுகணம் மாறன் வீட்டில் இருந்து திருமகள் நீங்கிய உடனே பொருட்செல்வம் குறைந்தது. மாடு போனது ஆட்கள் போனார்கள் வீடு போனது வேலையாட்களும் போனார்கள் நிலமும் போனது. அவர்களில் நாலா பக்கமாக விழுந்த அடியில் தொட்டதெல்லாம் முடிந்து மனிதரின் நிலை வறுமையில் சிக்கியது. 


ஆயினும் ,ஒரு நிலையிலும் அவர் சிவனடியாருக்கு அமுதப் படைப்பதை நிறுத்தவில்லை. இருப்பதை அடியார்களுக்கு கொடுத்துவிட்டு பட்டினி கிடக்க பழகிக் கொண்டனர் இருவரும், வீடு நிலம் சொத்து என சகலமும்  வந்த மாரனாருக்கு ஒரே ஒரு சொத்து அந்த மகேசன் பூஜை செய்வதும் அதன் பலகையை இங்கு சென்றாலும் சுமந்து செல்வதுமே, என்ன பலகை என்றால் அடியார்களை அமர வைத்து உணவு பரிமாறும் பலகை அந்தப் பலகையில் சிவபெருமானை அமர்ந்த உணவு உண்ணவதாக கருதினார். சிவனடியார்களை தவிர வேறு எவரையும் அந்த பலகையில் அவர் அமர்த்தியது கிடையாது. 


அவர்கள் , செழுமையிலும் ஆடம்பரம் இன்றி அலங்காரம் இன்றி எதை பக்தியாய் செய்தார்களோ வறுமையிலும் குடிசையில் அந்த பக்தியை செலுத்தினார்கள். என்னிலும் சிவன் மீது இருந்த அன்பு அவர்களுக்கு குறையவும் இல்லை. மனம் தளரோவோ இல்லை.


ஓலை குடிசையில் இருந்த மாறனார் கடனுக்கு ஒரு குத்தகையை எடுத்திருந்தார் அதில் விதை நெல்லை அங்குதான் விதித்துவிட்டு வீடு திரும்பியிருந்தார். இனி வளர்ந்து மூன்று மாதத்தில் விளைச்சலாக வீடு திரும்பும் வரை கடனுக்கு நெல்லோ கம்பம் குழு வாங்கி சமாளிக்க வேண்டியது இன்று கணவனும் மனைவியும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். 


வறுமை அந்த அளவுக்கு ஆட்டி வைத்திருந்தது இருவரையும் நமக்கும் வாழ்வு வரும் என்ற ஒற்றை நம்பிக்கையில் ஓலைக் குடிசையில் காத்திருந்தனர் இருவரும்  . அரிசி இல்லை நெல் இல்லை இந்த நிலையிலும் நீர் பூசிய அடியார்களுக்கு அவர்கள் அன்னம் அளிப்பதை நிறுத்தவில்லை. 


வீட்டில் முழுவதும் தீந்த நிலையில் அன்று இரவு ஒரு சிவனடியார் வெளியில் நீரூ பூசி காத்திருந்தார். மாறனார் வீட்டு கதவைத் தட்டினார் அந்த சிவனடியார். 


சிவனடியாரை பார்த்த மகிழ்ச்சியில் மாறினார் ஐயனே" என அவரின் கைப்பிடித்து பாதம் பணிந்து குடிக்க நீர் கொடுத்து நீர் கொடுத்து அவரை உபசரித்தார். பின் சிவனடியார்களை அமர்வுக்கும் பலகையில் அவரை அமரச் செய்து இன்னும் சிறிது நேரத்தில் அமுது தயாராகிவிடும் என்று கூறி மனைவியை பார்க்க உள்ளே சென்றார். 


கணவன் மனைவி இருவரும் கையே பிசிந்தவாறு அமுது படைக்காமல் சிவனடியாரை எப்படி திரும்ப அனுப்புவது என்று தெரியாமல் கலங்கிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் மாறனாரின் மனைவி ஒரு தெளிவான வழியை காட்டினார் . மழை பெய்து கொண்டிருப்பதால் வயலில் விதைத்த நெல்மணிகள் மேலே மிதங்கிக் கொண்டிருக்கும்.... வேறு வழி இல்லை அதை கொண்டு வந்தால் நான் அதை சரி செய்து அமுது செய்கிறேன். என்று  அவரின் கணவரிடம் கூறி அவரை வயலுக்கு அனுப்பி வைத்தார்.


முன்பக்கம் சென்றால் தெரிந்துவிடும் என்று,... பின்புறம் வழியாக மாறனார்  வயலை நோக்கி புறப்பட்டார். இந்த இடைவெளியில் தோட்டத்தில் இருந்த கீரைகளை சேகரித்து அது கூட்டு சமைத்தார் அம்மையார். அதற்குள் மாறனாலும் தட்டி தடுமாறி கீழே விழுந்து இரவில் பாம்பு , பல்லிகள் இருக்கும் இன்றும் பாராமல் சிவநாமத்தை உச்சரித்து வயல்வெளியில் சென்று  மயில் மேலே மிதந்து கொண்டிருந்த விதை நெற் மணிகளை சேகரித்து கொண்டு வந்தார். அதன் பின் தான் அவர்களுக்கு தெரிந்தது அங்கு சமைப்பதற்கு விறகும் இல்லை என்று , உடனே யோசிக்காமல் மேற்கூறையில் இருந்த தாங்கி பிடிக்கின்ற கோள்களை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தினார்கள்.


அவரின் மனைவியோ  அந்த நெல்லை அடுப்பில் வறுத்து , அதை உலக்கையில் இட்டு குத்தி அரிசி எடுத்தார். பின்பு அதில் அமுது தயார் செய்தார். சிவனடியாருக்கு அன்று இரவு அமுதினை தயார் செய்து சிவனடியாரை பலகையில் அமர்த்தி அமுது பரிமாறிய தொடங்கியவுடன், தங்களின் கடைசி பொருளையும் அடியார்களுக்கு கொடுக்கும் போதும் அவர்களுக்கு சிறிதளவும்  மனச்சோர்வோ , கவலையோ இல்லாமல் இன்முகத்துடன் அவர்கள் அமுதனை தயார் செய்திருந்தனர். அதை அடியாருக்கு விருந்தளிக்க பரிமாறியவுடன் அங்கு ஒரு பெரும் சோதிப்பிழம்பு தோன்றியது . இருவருக்கும் என்ன என்பது புரியாமல் திகைத்தனர். 


பெரும் வெளிச்சம் சூழ்ந்தது மங்கல இசையும் ஆலயமணியும் ஒரு சேர ஒலித்தது. நறுமணம் எங்கும் சூழ்ந்தது ,அந்த பேரொளியில்,... சிவன் உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.


"அன்பனே மாறா, வறுமையிலும் என் மீது நீ கொண்ட பக்தி ஒரு நாளும் குறையவில்லை. செமயிலும் குறையவில்லை. ஒருவன் சிறுமையில் செய்யும் தொண்டு வறுமையில் கடைப்பிடிப்பது மிகவும் சிரமம் நீ என் மீது கொண்ட பக்தியால் அதைத் தொடர்ந்து செய்து வந்தாய். உங்கள் இருவரின் அன்பும் சிவத்தொண்டில் மாபெரும் சாட்சியாகும். அதனால் இன்று முதல் சங்கநிதி, பதுமநிதிகளை உனக்கு அளிக்கிறேன் இனி மிக வலமையுடன் உன் திரு தொண்டை தொடர்வாயாக" மேலும், இப்பணியை முடித்து கைலாயம் வந்து எம்மை அடைவீர்களா"... என்று சொல்லு சிவபெருமான் மறைந்தார்.


அதை விடு அழகாக மாறியது அந்தப் பலகை புது கோலம் இட்டு சிவனடியாருக்காகவே வைக்கப்பட்டது . இருவரும் வாழ்வாங்கு வாழ்ந்து தொண்டு செய்து சிவப்பதம் அடைந்தனர். தமிழகத்தில் மூன்று இலையான் கொடி மாறனார் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த இளையான்குடி என்பதிலும் குழப்பம் உண்டு. நம் இளையான்குடி மாறனார் சிவகங்கை சார்ந்தவர். 


"மால் அயற்கு அரிய நாதன்  வடிவு ஒரு சோதி ஆக சாலவே மயங்குவார்க்கு சங்கரன் தான் மகிழ்ந்தே ஏலவார்க் குழலால் தன்னோடு இடவ வாகனம் ஆய் தோன்றி சீலம் ஆர் பூசை செய்த திருத்தொண்டர் தம்மை நோக்கி"இன்று சேக்கிழார் பெருமான் சான்றை தந்துள்ளார் 


இறைவனோடு இறைவி விட்டிருக்கும் தளம் என அவர் தெளிவாக சொன்னதில் சிவகங்கை இளையான்குடி என்று ஒரு தினம் ஆகிறது. இக்கோயிலில் இருந்து சிறிது தூரத்தில் மாறனாயனார் வாழ்ந்த வீடும், இப்போது அது மனமாயிற்று. அந்நிலத்தை முளை வாரி அமுதலித்த நாற்றங்கால் (இறைவனுக்கு அமுதலிக்க முளைவிட்ட நெல்லை அளித்த நாற்று வயல்) என்கிறார்கள் 


இவர்களின் குருபூஜை ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. மாற நாயனார் அவர் மனைவியும் வழிபட்ட இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் ஞானாம்பாள் கோவிலில் அவர்கள் நினைவு இன்றளவும் போற்றப்பட்டு குருபூஜை கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.


(தொடரும்)