சுந்தரரின் புகழுக்குச் சொந்தக்காரர்.. மெய்ப்பொருள் நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு
- கலைவாணி கோபால்
"வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்" என்ற சுந்தரின் புகழுக்கு சொந்தக்காரர் நம் மெய்ப்பொருள் நாயனார்.
அக்காலத்தில் தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையிலான சிற்றரசுகள் ஆண்ட நடு நாடு (சேதி நாடு).
திருக்கோவிலூரில் அதாவது, தற்போது விழுப்புரம் தென்பண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. தலைநகரமாக கொண்டு சிறந்த ஆட்சி நடத்தப்பட்ட நாடு சேதி நாடு.
இந்த சேதி நாட்டில் சிறந்த அரசர் ஆகவும் பக்தி நிறைந்த நகரமாகவும் மிகப் புகழ்பெற்ற வளமான நாடாகவும் சிறப்பான சைவ ஆட்சியை நடத்தி வந்தவர் ...நம் மெய்ப்பொருள் நாயனார்.
இவர் இயற்பெயர் யாரும் அறியப்படவில்லை. காணும் எல்லா பொருட்களிலும் மெய்யான சிவத்தையே இவர் மெய்ப்பொருளாக கண்டதால் மக்கள் அனைவராலும் இவர் மெய்ப்பொருள் நாயனார் என அழைக்கப்பட்டார்.
இவரின் ஆட்சிக் காலத்தில் அரச வருமானம் ஆறில் ஒரு பங்கை சைவ சமயத்திற்காகவும் சைவத்தொண்டிருக்கும், செலவழித்து சைவத்தை போற்றி காத்து வந்தவர்.
அது மட்டும் அல்லாமல்,... மூன்று அடையாளங்களுக்கு மிக முக்கியத்துவம் தந்து வாழ்ந்து வந்தவர்.
1. திருநீறு (பஸ்பம்)
2. ருத்ராட்சம்
3. நீண்ட முடி
இவை மூன்றும் தரித்த சிவனடியார்களை சிவனாகவே நினைத்து பாவித்து தொண்டுகள் செய்து வந்தவர். அவர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் ருத்ராட்சம் கிடைக்கப் பெறவில்லை என்று இமயமலையிலிருந்து தூய்மையான ருத்ராட்சங்களை வியாபாரிகள் மூலம் இறக்கி,. சாதுக்களுக்கும் மக்களுக்கும் கொண்டு சேர்த்து சைவப் பணியை செய்து வந்தவர்.
சைவப் பணியில் மட்டும் சிறந்து விளங்கியது அல்லாமல்,... போர் முறைகளிலும் மக்களை காக்கும் விதத்திலும் படைகளிலுமே... தன்னை சிறப்பாக மேம்படுத்தி எந்த குறையும் இல்லாமல் அரசாட்சி செய்து வந்தவர்.
நன்மைகள் அதிகம் உள்ள இடத்தில் கண்டிப்பாக தீமையும் முளைத்திருக்கும். அதுபோல இவரின் ஆட்சியின் மீதும் நாட்டு மக்களின் மீதும் பொறாமை கொண்ட எதிரி நாட்டு மன்னன் ஒருவனுமே இருந்தான் அவன் பெயர் முத்தநாதன்..
ஏற்கனவே,... பல போர்களில் மெய்ப்பொருள் நாயனாரிடம் தோல்வி அடைந்தவன். உனக்கும் நாடு உண்டு. குடிகள் உண்டு. நல்லபடியாக அவற்றை வழி நடத்திச் செல். இன்று ஏற்கனவே மெய்ப்பொருள் நாயனார் போரில் முத்தநாதனை கொல்லும் வாய்ப்பு இருந்தும் மன்னித்து அனுப்பப்பட்டவன்.தான் இந்த முத்த நாதன்.
எந்த முறையில் மெய்ப்பொருள் நாயனாரை தோற்கடிப்பது என்று இரவும் பகலும் யோசித்துக் கொண்டிருந்தவன் முத்தநாதன். அப்படி இருக்கும் வேளையில் அவன் சிந்தையில் தோன்றியது. மெய்ப்பொருள் நாயனார் சிவன் அடியார்களை ...சிவ வேடமாகவே கருதுவது. எனவே இந்த முறையில் மெய்ப்பொருள் நாயனாரை தோற்கடிக்க எண்ணினான். இதன் காரணமாக திட்டத்தையும் அவன் தீட்டினான்.
அவன் தீட்டிய திட்டத்தை செயல்படுத்த அவனுக்கான ஒரு நாளும் வந்தது. தானும் சடை முடி அணிந்து, ருத்ராட்சம் , திருநீறு தரித்து சிவனடியார் போல் வேடமிட்டு, (பொலி வேடம்) கையில் ஓலைச்சுவடி ஒன்றை ஏந்தி ,...அதில் மெய்ப்பொருள் நாயனாரை கொள்வதற்காக கத்தியும், மறைத்துக்கொண்டு சென்றான். தனது திட்டத்தை செயல்படுத்த இரவு நேரத்தை முத்தநாதமன் தேர்ந்தெடுத்து இருந்தான்.
சிவனடியார்கள் ,...எந்த வேலையிலும் தன்னை சந்திக்கலாம் .என்பது மெய்ப்பொருள் நாயனாரின் கோட்பாடு. அதனால்,... இரவு வேளையில் உணவருந்தி பள்ளி அறையில் உறக்கம் கொண்டிருந்தார் நம் நாயனார். அவரைப் பார்த்தாக வேண்டும் என்று பொய் வேடம் தரித்த முத்தநாதன் காவலர்களிடம் அனுமதி வாங்கி உள்ளே சென்றான். அப்போது, அந்தப் புறத்தில் தலைமை காவலாக இருந்த தத்தன் (மெய்ப் பொருள் நாயனாரின் நம்பிக்கைக்கு உரியவர்). சிவனடியார் அல்ல பொய் வேடம் போன்றவர் என்ற சந்தேகம் தத்தனுக்கு இருந்தது. அதனால் முத்த நாதனை உள்ளே செல்ல அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் .
அப்போது,.. தூங்கிக் கொண்டிருந்த அரசியார் எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தடுத்து சிவ வேடம் அணிந்த முத்த நாதனை வணங்கி அரசரையும் எழுப்பி இருவரும் முத்த நாதனிடம் ஆசி பெற்று திருநீறு வாங்கி அணிந்து கொண்டனர்.
"அரசரே இது நீ வணங்கும், சிவன் கொடுத்த ஆகமம். மகா ரகசியமானது. இது,... ஓதப்படும் இடத்தில் மலர் சூடிய பெண்கள் இருக்கக் கூடாது. என்று சொல்லி அரசியாரை,வெளியே அனுப்பச் சொன்னான்.
அரசரும் பொய் வேடம் தரித்த முத்தநாதனின் பேச்சைக் கேட்டு அரசியாரை வெளியே அனுப்பினார். ஆனால் தத்தன் மட்டும் திரை மறைவில் இருந்து சந்தேகத்தின் அடிப்படையில்,... என்ன நடக்கிறது என்பதை கவனிக்க ஒளிந்து கொண்டு இருந்தான்.
முத்தநாதன் முதலில் திருநீறு அணிவித்து, திருநீறு அணிவித்தாலே சிவனடியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது அரசரின் வழக்கம்... அப்படி குனியும் வேளையில். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெய்ப்பொருள் நாயனாரை தாக்கினான் முத்தநாதன். மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தத்தன் ஓடி வந்து அரசரை தாங்கி பிடித்து கட்டிலில் கிடத்தினான்.
அது மட்டுமல்லாமல், முத்த நாதனின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்குவதற்கு ஆயத்தமானான். ஆனால் அரசரோ அதற்கு இடம் கொடுக்கவில்லை.
திருநீறு அணிந்திருந்ததனாலே, அவர் எதிரியாய் இருந்தாலும் இப்போது நம்மவர் ஆவார். அவரை நீ மட்டுமல்ல பொதுமக்களும் அவரை தாக்க கூடாது .என்று வாக்கு வாங்கிக் கொண்டார். மேலும் அரசியார் அவ்விடத்திற்கு வந்தபோதும் அரசின் யாரிடமும் இதையே உரைத்தார். எக்காரணம் கொண்டும் நம் இடத்திற்கு வந்த சிவனடியாருக்கு அவர் பொய் வேடம் தரித்தவராகவே இருந்தாலும், அவருக்கு எந்தவித துன்பமும் இல்லாமல் குதிரை வண்டியில் ஏற்றி எல்லை வரை விட்டுவிட்டு வருமாறு தத்தனுக்கு ஆணை பிறப்பித்தார்.
தத்தனுக்கு முத்த நாதனைக் கொல்ல வேண்டும்..... என்ற எண்ணம் முழு அளவு தோன்றிய போதும். அரசரின் ஆணைக்கு இணங்கி அவனைக் கொண்டு போய் ஊர் எல்லையில் விட்டு வந்தான்.
முத்த நாதனை பத்திரமாக எந்த இடையூறும் தராமல், முழுமையாக பாதுகாத்து கொண்டு போய் சேர்த்த தகவலை அரசரிடம் வந்து சொன்ன பிறகு .. அரசியாரின் மடி மீது இருந்த மெய்ப்பொருள் நாயனாரின் உயிர் சிவனடி சேர்ந்தது.
அந்த வேலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் மெய்ப்பொருள் நாயனருக்கு காட்சி தந்து திருநீற்றுக்கும் ருத்ராட்சத்திற்கும், சிவனாகவே மதிப்பளித்து,...நீ ,உன் உயிரையே விட துணிந்தாய் , அதனால் ,நீ "எம்மோடு எக்காலமும் கைலாயத்திலிருந்து எம் மை நோக்கி கொண்டே இருப்பாய்" என மனம் மகிழ்ந்து வரம் அளித்தனர்.
திருக்கோவிலூர் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் இன்றளவும் கார்த்திகை மாதம், உத்திர நட்சத்திரம் அன்று நம் மெய்ப்பொருள் நாயனருக்கு குருபூஜையானது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.