விண்ணுக்கும் மண்ணுக்கும் பொதுவாய் பிறக்கும் மனிதன்.. ஜோதிடம் அறிவோமா?

Su.tha Arivalagan
Dec 23, 2025,12:25 PM IST


விண்ணுக்கும் மண்ணுக்கும் பொதுவாய் பிறக்கும் மனிதன், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஒன்பது (நவகிரகங்கள் கிரகங்கள்) கிரகங்களுக்கு உட்பட்டவர்களாகவே பிறக்கிறார்கள்.

 

அவர்கள் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரத்திற்கு உட்பட்டு தான் பிறக்க வேண்டும்


ராசிகளும், நட்சத்திரங்களும்:


12 ராசிகளும், மொத்தம் 27நட்சத்திரங்களும் உள்ளன

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்-4 பாதங்கள் உள்ளன. 

ஆக மொத்தம் 27 x 4 = 108 நட்சத்திர பாதங்கள்.


ஒவ்வொரு வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என, 12 வீட்டில் 108 நட்சத்திரக் கால்கள் அமர்ந்திருக்கும்.


எந்தெந்த ராசிகளில், என்னென்ன நட்சத்திரங்கள் இடம்பெற்று உள்ளன: 


மேஷம் : 




அசுவினி (1,2,3,4 பாதங்கள்)

பரணி(1,2,3,4 பாதங்கள்) கார்த்திகை (முதல் பாதம்).


ரிஷபம் : 


கார்த்திகை (2, 3, 4 பாதங்கள்), 

ரோகிணி(1,2,3,4 பாதங்கள்) 

மிருகசீரிஷம் (1, 2 பாதங்கள்).


மிதுனம் : 


மிருகசீரிஷம் (3, 4 பாதங்கள்), 

திருவாதிரை(1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் (1, 2, 3 பாதங்கள்).


கடகம் : 


புனர்பூசம் (4-ஆம் பாதம்), 

பூசம்(1,2,3,4 பாதங்கள்)

ஆயில்யம்(1,2,3,4 பாதங்கள்)


சிம்மம்: 


மகம்(1,2,3,4 பாதங்கள்)

பூரம்(1,2,3,4 பாதங்கள்)

உத்திரம் (1-ஆம் பாதம்)


கன்னி: 


உத்திரம் (2, 3, 4 பாதங்கள்), 

அஸ்தம் (1,2,3,4 பாதங்கள்)

சித்திரை (1, 2 பாதங்கள்)


துலாம்: 


சித்திரை (3, 4 பாதங்கள்)

சுவாதி (1,2,3,4 பாதங்கள்)

விசாகம் (1, 2, 3 பாதங்கள்)


விருச்சிகம்: 


விசாகம் (4-ஆம் பாதம்), 

அனுஷம்(1,2,3,4 பாதங்கள்)

கேட்டை(1,2,3,4 பாதங்கள்)


தனுசு: 


மூலம் (1,2,3,4 பாதங்கள்)

பூராடம் (1,2,3,4 பாதங்கள்)

உத்திராடம் (1-ஆம் பாதம்)


மகரம்: 


உத்திராடம் (2, 3, 4 பாதங்கள்), 

திருவோணம் (1,2,3,4, பாதங்கள்) 

அவிட்டம் (1, 2 பாதங்கள்)

 

கும்பம்: 

 

அவிட்டம்(3,4, பாதங்கள்) 

சதயம்(1,2,3,4 பாதங்கள்) 

பூரட்டாதி: (1,2,3 பாதங்கள்)


மீனம்:


பூரட்டாதி(4 ம் பாதம்)

உத்திரட்டாதி(1,2,3,4 பாதங்கள்)

ரேவதி: (1,2,3,4  பாதங்கள்)


பஞ்சபூதங்களின் பகுப்பில் ராசிகள்


மேஷம், சிம்மம் ,தனுசு - நெருப்பு ராசிகள்

ரிஷபம், கன்னி , மகரம் - நிலம் ராசிகள்

மிதுனம், துலாம், கும்பம் - காற்று ராசிகள்

கடகம் , விருச்சிகம், மீனம் - நீர் ராசிகள்.


சரம், ஸ்திரம், உபயம் ராசிகள் யாது?


சர ராசிகள்:

மேஷம்,கடகம்,துலாம், மகரம்  


ஸ்திர ராசிகள்:

ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் 


உபய ராசிகள்:

மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம் 


நட்சத்திர அதிபதிகள்:


கேது - அஸ்வினி, மகம், மூலம்

சுக்கிரன் - பரணி, பூரம், பூராடம்,

சூரியன் - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.

சந்திரன் - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,

செவ்வாய் - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்

ராகு - திருவாதிரை, சுவாதி , சதயம்

குரு - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி

சனி - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி

புதன் - ஆயில்யம் , கேட்டை, ரேவதி


ஒவ்வொரு ராசிக்கும் ராசி அதிபதிகள் யார்


ஒவ்வொரு ராசியும், ஒரு நவகிரகத்தின் வீடு. ஒரு சிலருக்கு இரண்டு வீடு. நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுக்கு சொந்த வீடு இல்லை.எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ,அதுவே அவர்களுக்கு வீடுகள்.


ஒவ்வொரு ராசியின் அதிபதிகள் பின்வருமாறு:


மேஷம் - செவ்வாய்

ரிஷபம் - சுக்கிரன்

மிதுனம் - புதன்

கடகம் - சந்திரன்

சிம்மம் - சூரியன்

கன்னி - புதன்

துலாம் - சுக்கிரன்

விருச்சிகம் - செவ்வாய்

தனுசு - குரு

மகரம் - சனி

கும்பம் - சனி

மீனம் - குரு


இதைப்போலவே ஒவ்வொரு ராசி வீட்டிலும், ஒரு கிரகம் உச்சம் பெறுகின்றன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:


1.மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார்.

2.ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுகிறார்.

3.மிதுனத்தில் கிரகங்கள் உச்சம் இல்லை

4.கடகத்தில் குரு உச்சம் பெறுகிறார்.

5.சிம்மத்தில் உச்சம் இல்லை

6.கன்னியில் புதன் உச்சம் பெறுகிறார்.

7.துலாத்தில் சனி உச்சம் பெறுகிறார்.

8.விருச்சிகத்தில் ராகு,கேது உச்சம் பெறுகிறார்.

9.தனுசில் உச்சம் இல்லை

10.மகரத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார்.

11.கும்பத்தில் உச்சம் இல்லை

12.மீனத்தில் குரு உச்சம் பெறுகிறார்.


ஒவ்வொரு ராசி வீட்டிலும், ஒரு கிரகம் ஆட்சி பெறுகின்றன.


1.மேஷத்தில் செவ்வாய் ஆட்சி  பெறுகிறார்.

2.ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி  பெறுகிறார்.

3.மிதுனத்தில் புதன் ஆட்சி பெறுகிறார்

4.கடகத்தில் சந்திரன் ஆட்சி  பெறுகிறார்.

5.சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெறுகிறார்

6.கன்னியில் புதன் ஆட்சி பெறுகிறார்.

7.துலாத்தில் சுக்கிரன் ஆட்சி  பெறுகிறார்.

8.விருட்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார்.

9.தனுசில் குரு ஆட்சி பெறுகிறார் 

10.மகரத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார்.

11.கும்பத்தில்  சனி ஆட்சி பெறுகிறார்

12.மீனத்தில் குரு ஆட்சி பெறுகிறார்.


பல ஜோதிட நூல்களின் சாராம்சங்கள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜோதிடக் கல்வி பயின்ற ஞானத்தையும் வைத்து எழுதப்பட்டது இக்கட்டுரை. பிழை இருந்தால் பொருத்தருள்க.


(ந.லட்சுமி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம்  இணைந்து, நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)