தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், மார்கழி 08 ம் தேதி செவ்வாய்கிழமை
திருவோணம் விரதம். இன்று காலை 11.30 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 05.31 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.31 வரை மரணயோகமும், பிறகு காலை 06.24 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 01.45 முதல் 02.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - மிருகசீரிடம், திருவாதிரை

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கணவரின் அன்பைப் பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்கள் ஞாபகத்திறனில் சிறந்து விளங்குவார்கள். பணம் பல வழிகளில் வந்து சேரும். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெண்களின் சேமிப்பு உயரும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பிரபலங்களின் அறிமுகம் மூலம் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். உடல் பொலிவு பெறும். கணவன் மனைவி உறவு மேம்படும். சேமித்த பணத்தில் தங்க ஆபரணங்கள் வாங்குவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால், பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களால் பெரிய நன்மைகள் இருக்காது. நேரமும் பணமும் விரயமாகும். இறைவனை மட்டும் பிரார்த்திப்பது சிறந்தது. உடல் நலத்தில் கவனம் தேவை. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்தவை ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். புதிய கணினி வாங்குவார்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பைப் பெறுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் மன நிம்மதி கிடைக்கும். கடனை அடைப்பார்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் உதவுவார்கள். திடீர் பணவரவு மகிழ்ச்சியைத் தரும். புதிய வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு தெம்பளிக்கும். அரசு வேலைகள் சாதகமாகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். மூளை சுறுசுறுப்பாக செயல்படும். உடல்நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் நன்கு படிப்பார்கள். நல்ல விஷயங்களில் திருப்பம் கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வார்கள். பணவரவு நன்றாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. சுப விசேஷங்களில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். வியாபாரத்தின் நுணுக்கங்களை அறிவார்கள். மாணவர்கள் பொறுப்புடன் கல்வி கற்பார்கள். பழைய கடன்பாக்கி தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவார்கள். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து செய்வார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு அதிரடியான முயற்சிகள் வெற்றி தரும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டு. இரும்பு தொழிலில் லாபம் கூடும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மனைவியின் முன்னேற்றத்தில் பங்களிப்பார்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் ஈடுபாடு கூடும். அலைச்சல்களால் அசதி ஏற்படும். சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும். எதிரிகள் சரணடைவார்கள். பிள்ளைகள் நன்கு படிப்பார்கள். நீண்ட நாட்களாக தர வேண்டிய கடன்கள் பைசலாகும். சேமிப்பு அதிகரிக்கத் தொடங்கும். காதலர்கள் ஒன்று சேர்வார்கள். தம்பதிகள் அன்பில் திளைப்பார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்கள் புதிய நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் போட்டிகள் நிலவும். எதிரிகள் விலகுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறக்கும். விரும்பிய நாட்டின் விசா கிடைக்கும். திடீர் பணவரவு மகிழ்ச்சியைத் தரும். மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வார்கள். தம்பதிகளின் சந்தேகம் தீரும். சளித் தொந்தரவு நீங்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் நன்கு படிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு விஷயங்களில் ஆதாயம் உண்டு. மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். சொகுசு காரில் பயணம் செய்வார்கள். அந்தப் பயணத்தால் வெற்றிகள் குவியும். முதியோர்களின் பிரார்த்தனை நிறைவேறும். தேவையற்ற பயம் நீங்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கண்ணாடியே கண்ணாடியே.. A Conversation With Mirror!
விண்ணுக்கும் மண்ணுக்கும் பொதுவாய் பிறக்கும் மனிதன்.. ஜோதிடம் அறிவோமா?
விவசாயம் காப்போம் வளமாக வாழ்வோம்.. இயற்கை வழி நடப்போம்!
விதையால் ஆயுதம் செய்வோம்.. விவசாயிகள் தினத்தன்று இந்த உறுதியை எடுப்போம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இன்று தங்கம் சரவனுக்கு ரூ.1,600 உயர்வு
National Farmer's Day.. உழவுக்கு வந்தனை செய்வோம்.. விவசாயிகளுக்கு சல்யூட் செய்வோம்!
அன்னை யசோதா பாலகனே.. பிருந்தாவன கோபாலனே!
{{comments.comment}}