திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

Su.tha Arivalagan
Jul 30, 2026,12:46 PM IST

- கலைவாணி கோபால்


"திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் அடியார்க்கும் அடியேன்"-சுந்தரமூர்த்தி நாயனார். 


நான்கு சைவக்குரவர்களில் முக்கியமானவர் திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் சுவாமிகள் (சைவர்கள் என்றால் அடையாளம் என்று பொருள். இவர்கள் சைவத்தை அடையாளம் கொடுத்தவர்கள்.)


சோழ நாட்டின் அடுத்துள்ள நடுநாட்டில் திருவாமூர் என்னும் ஊரில் கெடிலம் நதிக்கரையில் அமைந்திருந்த ஊரில் பிறந்தவர் திருநாவுக்கரசர்.


இவரது தாயார் மா தினியார், தந்தையார் புகழனார், இவருக்கு திலகவதி என்ற ஒரு அக்காவும் உண்டு. திலகவதியார் 12 வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்துவிட்டார். அவர் தந்தை இறந்ததும், தாயாரும், உடன்கட்டை ஏறி விட்டார்.


தாயார் மாதினி உடலில் எரியும் தீயினை கண்டு கண்களில் நீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும், ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி அழுது கொண்டிருந்தனர்.


தந்தையார் உயிருடன் இருக்கும் போதே திலகவதியாருக்கு, பல்லவ மன்னனின் படைகளில் முக்கிய வீரனாய் இருந்த கலிப்பகையாருக்கும் நிச்சயம் நடந்தேறி இருந்தது. விஷ்ணு சாளுக்கியருடன் ஏற்பட்ட போரில் கலந்துகொண்ட கலிப்பகையார் அப்போரில் வீர மரணம் அடைந்தார். இதைக் கேட்ட திலகவதி யாரும் தானும் இறந்துவிட முடிவு செய்தார். ஆனால் ஏழு வயது தம்பியை தனியே விட முடியாமல் அவருக்காக தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்.


தமிழிலும், கவி பாடும் திறமையிலும், அப்போதே மிகவும் சிறப்பு வாய்ந்தவராக மருள்நீக்கியார் (திருநாவுக்கரசரின் இயற்பெயர்) இருந்து வந்தார். இதனால், திலகவதி அம்மையார் இவர் வளர்ந்து சிவபெருமானுக்காக பாமாலைகள்...... பாட வேண்டும் என்று உள்ளத்தில் ஆசை கொண்டு வளர்த்து வந்தார்.




சைவப் புலவர்களை தாண்டி சமணருடன் மருள்நீக்கியாருக்கு நட்பு ஏற்பட்டது. ஏனென்றால் சமணத்தில்  தமிழில் புலமைமிக்க  பலர் சமணத்தில் இருந்தனர். அதனால் அந்த ஊரின் தலைநகரான பாடலிபுத்திரத்தில் தங்கி இவர் தமிழ் கற்று வந்தார்.


திலகவதி அம்மையாருக்கு அங்கு அனுப்புவதில் சிறிதும் விருப்பமில்லை. இருந்தாலும், படித்துவிட்டு தம்பி திரும்பிவருவான் என்ற நம்பிக்கையில் இதற்கு சம்மதித்தார். ஆனால், அங்கு நடந்ததோ வேறு..... சமணர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மருள்நீக்கியாரை சமண மதத்திற்கு மாற்றி விட்டனர். சமணருடன் சேர்ந்து கலைகளை கற்க ஆரம்பித்தார் மருள்நீக்கியார்.


அன்றைய சமணர்கள் .... இன்று மதமாற்ற சக்திகள் என்னென்ன? விஷயங்களை எல்லாம் கையில் வைத்திருக்கின்றதோ!, அதைப்போல ,அவர்களும் பல தொண்டுகள் செய்வதாக சொல்லி சைவத்தை அழித்து சமணத்தை வளர்த்தனர். தாயில்லா பிள்ளையான மருள்நீக்கியாரும் அவ்வாறே, அவர்கள் சமணத்திற்கு மனதை மாற்றி கொண்டு சென்றனர். 


படிப்பினை முடித்து தன்னோடு வந்து சிவ சேவை செய்வார் என திலகவதியார் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். அவருக்கு வந்த செய்தியோ! அவர் சமணராக மாறியது.


நீறு அணிந்து ,தோடு அணிந்து ,தலையில் குடிமி வைத்து ,ஒரு சைவ அடையாளமாக தம்பி சிவனை பாட வருவான் என்று நினைத்த திலகவதியாருக்கு சமணராகி மொட்டை அடித்து ஓலைப்பாய் சூழ்கட்டி  கையில் மயிலிறகு உடன் வரும் தம்பி முகத்தையே அவர் காண கூட விரும்பவில்லை.


திலகவதி அம்மையாரின் ஒரே உறவு, கடைசி உறவான தம்பியும் விட்டு சென்றதில் விரக்தி நிலைக்கு சென்றார் திலகவதியார்.


வெள்ளாடை அணிந்த நீறு பூசி முழு சிவனடியாராய் மாறி திருவதிகை விரட்டானேஸ்வரர் கோயிலில் பணியாளராய் தன்னை மாற்றிக் கொண்டார். சொத்துக்களை கோவிலுக்கு கொடுத்துவிட்டு கோவிலை சுத்தப்படுத்துதல், பூ தொடுத்துதல், என ஒரு அடியாராய் தன்னை மாற்றிக் கொண்டு அமர்ந்து விட்டார்.


அனுதினமும் தம்பிக்காக சிவன் முன் சில சொட்டு கண்ணீரை விட அவள் தவறுவதில்லை. சமணத்தை விட்டு இந்த சைவத்துக்கு வருவான் என தினம் தினம் சிவனிடம் விண்ணப்பம் வைத்தார் திலகவதியார்.


மருள்நோக்கி யார் எனும் சைவப் பெயரை நீக்கி, தர்மசேனர் எனும் சமணப் பெயர் அவருக்காக சூட்டினர் சமணர்கள். சமணத்தில் மிகப்பெரும் தலைவராகவும், வல்லவராகவும் வலம் வந்தார்.


(திருநாவுக்கரசர் கதை தொடரும்)