மெய்மையையே திருமேனி வழிபடா நிற்கா.. சண்டிகேஸ்வர நாயனார்!

Jul 22, 2026,02:10 PM IST

- கலைவாணி கோபால்


"மெய்மையையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாததாள் மனுவினால் எரிந்த அம்மையான் அச்சண்டி பெருமானுக்கு அடியேன்"-சுந்தரமூர்த்தி நாயனார் 


சோழ நாட்டில் கும்பகோணம் அருகில் காவிரியின் கிளையான மண்ணின் கரையில் அமைந்திருந்த திருச்சேய்நல்லூரில்   அந்தணர் மரபில் தோன்றியவர். 


திருச்சேய்நல்லூரில் உள்ள சத்யகிரீஸ்வரர் ஆலயத்தில் சூரனை அழிக்க திருச்செந்தூருக்கு செல்லும் முன் முருகப்பெருமான் அங்கு அன்னை பார்வதி தேவியை வேண்டி தவமிருந்து அன்னையின் ஆசியைபெற்ற சிறப்பு மிக்க திருத்தலம்.


சண்டிகேஸ்வரர் பெருமானின் இயற்பெயர் விசார சருமர். தாயார் பவித்ரை. இவரது தந்தையார் பெயர் யட்சதத்தன். இவர் பிராமணர் என்பதால் தமிழும், சமஸ்கிருதமும் இரண்டற கலந்து கற்று இருந்தார். ஆறு வயதுக்குள் மிகப்பெரிய ஞானத்தை பெற்றிருந்தார்.


பிராமணர் என்பவர்களுக்கு ஆறுவகை குணங்கள் உண்டு. ஒன்று திருநீறு, பூணூல், மூன்று வேலை வழிபாடு, நான்கு வேதம் உணர்தல், ஐந்து வகை புலன்களை அடக்குதல், புலன்களை மனத்தின் பின்னால் நிறுத்துதல், தர்ம தானங்கள் செய்தல்,என 6 சிறப்புமிக்க குணங்களை பிராமணர்கள் கொண்டிருத்தல் அடிப்படையாகும்.


அக்காலத்தில் பிராமணர்கள் இல்லங்களில் பசு மாடுகள் நிறைந்திருந்தன. ஏனென்றால், பால், நெய், தயிர் என பூஜை பொருட்களுகாகக் மற்ற  அடிப்படை தேவைக்காகவும் பசுமாடுகளை  வளர்த்து வந்தார்கள்.அவற்றை மேய்ப்பதற்காக இடையர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தார்கள்.


அப்படி ஒரு நாளில் விசாரசர்மர்,மாடுகளின் வருகைக்காக காத்திருந்தபோது ,ஒரு பசுவினை இடையன் கடுமையாக அடிப்பதை கண்டார். பொதுவாக பசுக்கள் கன்றுகளை பிரியும் நேரம் வரை அடம் பிடிக்கும் .அதனால், வலிய இழுத்துச் செல்வார்கள். 




ஆனால் ,எந்த இடையூறும் இல்லாமல் மாட்டினை மிகக் கடுமையாக இடையன் தாக்கினான். இதைக் கண்ட விசாரசர்மர்க்கு மிகவும் கோபம் வந்து , அந்த இடையனிடம் இருந்த குச்சினை வாங்கி  எரிந்து  விட்டு,நீ எப்படி பசுவினை அடிக்கலாம் .பசு எவ்வளவு மரியாதைக்குரியது? என வேதங்கள் சொல்கின்றன.   உனக்கு புரியும்படி சொல்கிறேன். பசுக்கள் இல்லாது வெண்ணெய் ஏது ? நெய் ஏது? இதை எல்லாம் இல்லை என்றால் எப்படி கோவிலில்  அபிஷேகம்   நடக்கும் என இடையரை பார்த்து கேள்வி கொண்டிருக்கும்போது, இடையன் விசாரகரை நோக்கி கூறினான். நீ இவ்வளவு சொல்கிறாய். நீயே பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டான். விசாகசர்மரும் தானே மாடுகளை மேய்த்து கொள்வதாக கூறினார்.


மாடுகளை தினமும் மேய்க்கும் பொறுப்பு விசாக சர்மருக்கு வந்தது. இதனால் அவர் அனுதினமும் ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் மாடுகளின் மீது கொண்ட அன்பினால் இவர் தினமும் அதை மேய்ச்சலுக்கு கொண்டு போவதும், திருப்பிக் கொண்டு வருவதுமாக இருந்தார். 


இவரது அன்பின் காரணமாக பசுக்கள் தானாகவே பால் சொறிய ஆரம்பித்தது. இதை கண்ட விசாகருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பசுக்களின் பால் அதன் ரத்தத்திலிருந்து உருவாகிறது. அது வீண் போகக்கூடாது என்று எண்ணிய விசாக சர்மருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதுமட்டுமல்லாமல், முதல் விளைச்சல் எப்படி கடவுளுக்கு சொந்தமோ அதுபோல பசுக்களின் முதல் பாலும் சிவனுக்கே உரியதாக இருக்கட்டும், என்று எண்ணத்தில் அவர் இருக்கும் இடத்திலே மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார். 


அந்த சிவலிங்கத்தை பசுக்களின்  தானாக சுரக்கும் பாலை கொண்டு அபிஷேகம் செய்தார். அவருக்கு ஏற்கனவே வேதங்கள் தெரிந்திருந்தால், அந்த மந்திரங்களையும் சிவனுக்கு அபிஷேகம் செய்து உரியதாக்கினார். இப்படியே நாள்தோறும் அவரின் பூஜையை இருக்கும் இடத்திலே நிறைவு செய்து கொண்டிருந்தார்.


ஒரு நாள் பசுக்கள் மேய்ந்து கொண்டு இருந்த  நிலத்திற்கு அருகே அந்தணர் ஒருவர் சென்று கொண்டிருந்த போது ,பசு தானாக ஒரு மணல்மேட்டின் மீது பாலை சுரந்து கொண்டிருந்ததை கண்டு வியந்தார். விசாக சர்மர் அதை தடுக்காமல், அங்கு  அதை வேடிக்கை பார்த்து இருந்தார் என்பது போல விசாகரைப் பற்றி அவரின் தந்தையாரிடம் குறை கூறினார்.


"யாகத்தின் அவிஸை ஏற்றுக் கொள்ளும் தெய்வமே பெரும் தெய்வம்" எனும் வகையில் நம்பிக்கை கொண்டிருந்த அவருக்கு மணலில் லிங்கத்துக்கு சிறுவன் பால் அபிஷேகம் செய்வது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மகனுக்கு தெரியாமல் ஒரு குருந்த மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு நடப்பதை கவனித்தார் எச்சதத்தன்.


வழக்கமாக நடக்கும் காட்சிகள் அங்கு நடந்தன. மாடுகளை மேய்த்துக் கொண்டே கொன்றை பூப்பறித்தல், அத்திப்பூ பறித்தல் அதை உருவாக்கிய மணலிங்கத்தில் மீது முதல் கலயப்பாலை எடுத்து மந்திரம் சொன்னபடியே ஊற்றிய போது மறைவில் இருந்து ஓடி வந்த எச்சதத்தன் முட்டாளே!என்ன காரியம் செய்கின்றாய்? பாலை எடுத்து வீணாக ஊற்றுகிறாய்! எனும் ஆத்திர வார்த்தைகளால் அறிவு இழந்து பிரம்பை எடுத்து அபிஷேக பாலை கீழே தட்டி விட்டார். 


ஆனால், அவர் கத்திய  எதுவும்  அவர் காதில் விழவில்லை. குச்சியினை எடுத்ததோ எதுவும் விசாக சர்மர்க்கு எந்த சலனமும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அவர் ஆழ்ந்த தியானத்தில் சிவனோடு ஒன்றி இருந்தார். விசாகரின் முதுகில் அடித்தது கூட அவருக்கு தெரியாது . காற்று வீசியது போல் அவர் போக்கில் இருந்தார். ஆக்ரோஷமாக கத்தியபடி பால் கவளங்களை காலால் தட்டி விட்டார். அப்போது, கண்திறந்த விசாக சருமர் பூஜையில் இடையூறு என்பதை அறிந்து அவருக்கு எதிரே நிற்பது தந்தையோ? இல்லை மற்ற உறவோ? என்பதை அறியாமல் லிங்கத்தை நோக்கி வந்த காலை அங்கு இருந்த சிறுதுரும்பை தூக்கி எறிந்து தடுத்தார். ஆனால் அந்த சிறு துரும்பு மழுவாக மாறி  எச்சத்தனின் காலை வெட்டியது. அதே இடத்தில் அவர் கால்கள் வெட்டப்பட்டு, இறந்தும் விட்டார். என்ன நடந்தது? என்று தெரியாமல் தியானத்தில் இருந்து கண் விழித்த விசாகருக்கு அப்போது தான் நிலைமை புரிந்தது.


அவரால் ,என்ன நடந்தது என்பதை நம்பவே முடியவில்லை. தந்தை இறந்து கிடந்ததை நினைத்து அதிர்ச்சியில் நின்றார்.  பெரும்பாவத்திற்கு ஆளானதாக எண்ணினார். தந்தையை கொன்ற பாவம். அவர் குருவாக இருந்து மந்திரங்களை ஓதியதால் குருவை கொன்ற பாவம். அந்தணர் என்பதனால் பிராமணரை கொன்ற பாவம் . என்று முப்பெரும் பாவம்  ஆளானதாக கருதினார். 


இப் பாவத்திற்க்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது என எண்ணினார் .இதனால், தாயும் அவரிடத்தில் பேச மாட்டார். என்பதை அறிந்த விசாக சர்மர் இதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. இப்பாவத்திற்கு ஆளான நாம் இனி உயிரோடு இருக்க வேண்டாம் என்று  எண்ணி மணி ஆற்றில் விழுந்து சாகலாம். என முடிவெடுத்த நேரத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.


அவர் மண்ணில் கட்டிய லிங்கத்திலிருந்து ஒரு ஒளி தோன்றியது. அதில் சிவன் கொன்றை பூக்களை அணிந்திருந்தார். அவர் மேனி எங்கும் வில்வ இலைகள் இருந்தன. பாலின் துளிகளும் அவர் மேல் ஒட்டி இருந்தன.... ஆம் சிவலிங்கத்திற்கு அவர் சூட்டிய அதே கொன்றை பூக்கள் ..வில்வ இலைகளும் ...பாலுமே! பெருமானே !என உரக்க ஓலமிட்டு விழுந்து வணங்கினார். விசாரசர்மர்.


அவரைத் தட்டி எழுப்பி தன் மடியில் அமர்த்தி கொண்டார் பார்வதி தேவி. சிவபெருமான் சொன்னார் "என் மேல் கொண்ட பக்தியால் உன் தந்தையினை இழந்த விசாகனே" இனி "நானே உனக்கு தந்தை "தந்தை கொன்ற உன்னை இனி ஏற்காத உன் அன்னைக்கு பதிலாக 'உமையவளே உனது அன்னை.' ஆம் எனக்காக தந்தையினை இழக்கும் அளவுக்கு கோபம் கொண்ட நீ ! இனி "சண்டிகேஸ்வரர்" . என்னும் பேரினை அடைவாய் எம் 'இடப்பாகம் எல்லா ஆலயத்திலும் அமர்வாய்' எல்லா பொறுப்புகளும் 'உம்மிடமே ஒப்படைக்கிறோம். என சொல்லி தன் தலையில் இருந்து கொன்றை பூக்களை அவர் தலையில் சூடி வாழ்த்தினார்.


சிவன் அவரையும், இறந்து கிடந்த அவர் தந்தையினையும், தன்னோடு சேர்த்துக் கொண்டு கைலாயம் ஏகினார். அருள்நிலையால் 'சண்டிகேஸ்வர' பதவி அடைந்த விசாக சர்மருக்கு சண்டிகேஸ்வர சன்னதி எல்லா ஆலயங்களிலும் லிங்கத்தின் இடப்புறம் தனியாக  உள்ளது. 


சிவனுக்கும் சண்டிகேஸ்வரருக்கும், குறுக்கே யாரும் வரக்கூடாது ...என்பதால், அவர் சன்னதி சிறு சுவரோடு லிங்கத்து கருவறையோடு ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் எல்லா வரவு ,செலவு கணக்குகளையும் அவரே பார்ப்பார் என்பதால், சிவாலயத்தில் வணங்கி வரும் பக்தர்கள் அங்கிருந்து சிவன் அருளை தவிர எதையும் எடுத்துச் செல்லவில்லை. என்பதை காட்ட கைகளை மெல்லத் தட்டி காட்டும் வழக்கம் வந்தது. கோயிலின் சொத்துக்களை கூட சண்டிகேஸ்வரர் பெயரில் தான் வாங்கப்பட்டன. இது அக்கால செப்பேடுகளில் ஆதாரங்களுடன் உள்ளது .சிவன் கோயிலை வலம் வரும்போது சண்டிகேஸ்வரையும் சேர்த்து வலம் வரும்போது" ஓம்"என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் நமக்கு கிடைக்கும்.


" மாணிபால் கறந்து ஆட்டி வழிபட நீனுலம் எல்லாம் ஆளக் கொடுத்த என் ஆணியைச் செம்போன் அம்பலத்துள் நின்ற தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ"- என்று தேவாரம் இவரைப் பற்றி சொல்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்