சிவபெருமானின் காலை தன் தலையில் தாங்கி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர்!
- கலைவாணி கோபால்
சீர்காழி தோணிபுரத்து கோயிலுக்கு சென்று இருவரும் வணங்கிய பின்னர், சில காலம்..... சீர்காழியில் திருநாவுக்கரசர் பெருமான், திருஞானசம்பந்தருடன் தங்கியிருந்தார். அப்போது, திருநாவுக்கரசரை சமணர்கள் வதைத்த கதைகளை கேட்டு, தன்னை அறியாமல், கண்ணீர் சிந்தினார் சம்பந்தப் பிள்ளை.
பின்பு, ஆரூர் செல்ல வேண்டியதை உணர்ந்த நாவுக்கரசர் சம்பந்தப் பிள்ளையிடம் இருந்து விடை பெற்றார். அவரை, பிரிய மனம் இல்லாமல், திருகோலக்கா வரை, உடன் சென்று வழி அனுப்பினார் சம்பந்தர்.
இருவருக்கும் ஆன உறவு மிகவும் அழகாக மலர்ந்திருந்தது. ஆரூர் ,செல்லும் வழியிலேயே கருப்பறியலூர் புன்கூர், நீடூர், குறுக்கை, முதலிய தலங்களையும் செம்பொன், பள்ளி, மயிலாடுதுறை, திரு துருத்தி, திருவாடுதுறை, திருவிடைமருதூர் முதலிய தலங்களையும் தரிசித்துவிட்டு, பின் திருசக்தி முற்றத்திற்கு வந்தடைந்தார் திருநாவுக்கரசர்.
அங்கு," கோவாய் முடுகி " எனத் தொடங்கும் பதிகத்தை பாடினார். திருசக்தி முற்றம் மிகப் பிரசித்தி பெற்ற ஆலயமாக இருந்தது. சிவனடியார்கள், பலர் தீட்சை பெரும் ஆலயமாகவும் இருந்தது. அங்கு இருக்கும் பெருமானுக்கு சிவ கொழுந்தீஸ்வரர் என்ற பெயர்.
'தீட்சை 'என்பது அருள் நிலை அடைந்த அடையாளம். திருநாவுக்கரசர் பெருமானுக்கும் தீட்சை பெரும் ஆசை வந்தது . முதிர்ந்த வயதினராக அவர் இருந்ததினால், யாரிடம் தீட்சை பெறுவது? என்ற சந்தேகம் வந்து சிவனிடமே, சரணடைந்தார் திருநாவுக்கரசர்.
அப்போது, திரு சக்தி முற்றத்தின் பெருமான் தானே திருநாவுக்கரசருக்கு குருவாக வர எண்ணி.. திருநாவுக்கரசரை நோக்கி :ஒரு குரல் ஒலித்தது. "நல்லூர் வருக" என கம்பீரமாக அக்குரல் ஒலித்தது.
திருநாவுக்கரசர் பெருமானும், இது பெருமானின் செய்தி என்று நல்லூருக்கு புறப்பட்டார். நல்லூரில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர், ஆலயத்தில் அருவமாக தோன்றினார் சிவபெருமான். சிவபெருமானின் காலை, தன் தலையில் தாங்கி. தீட்சை பெற்றார் திருநாவுக்கரசர். சிவனே! தனக்கு தீட்சை அளித்த மகிழ்ச்சியில் "நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்" என்ற பதிகத்தை பாடினார். பின்பு நல்லூர் பெருமானை மனதார வழிபட்டு,
நல்லூரில், இருந்து திருப்பழனம் ஆலயம் சென்றார். அங்கு ,தான் அவருக்கு வித்தியாசமான செய்தி கிடைத்தது. திங்களூரில் அப்பூதி அடிகளார் என்பவர் ,அவர் செய்யும் அனைத்து செயல்களிலும் திருநாவுக்கரசர் என்ற நாமத்தை வைத்து அவரை மானசீக குருவாக ஏற்று சைவப் பணிகளை செய்வது இவருக்கு தெரிந்தது.
அப்பூதி அடிகளாரின், தண்ணீர் பந்தல் முதல், அன்ன சத்திரம் வரை அனைத்துமே (தன் பிள்ளைகள் உட்பட) திருநாவுக்கரசர் பெருமான் பெயரை சூட்டியதை கேட்டு அவரைப் பார்க்க சித்தம் கொண்டார் அப்பர் சுவாமிகள். அப்போது ஊருக்குள் சென்று அப்பூதி அடிகளாரை சந்தித்தார். திருநாவுக்கரசர் பெருமான் இவர் தான் என்று அப்போது, அப்பூதி அடிகளாருக்கு தெரியாது.அவர் வாயிலாகவே தன்னை பற்றி அவர் தன் மீது கொண்டுள்ள அபிமானத்தை கேட்டு மனம் நெகிழ்ந்து தன் யார்? என்ன சொன்னார்.
அவர் யார்? என்பதை அறிந்த பின், குடும்பமே அவர் காலில் விழுந்து, மனதால் மகிழ்ந்து, அவரை இல்லம் அழைத்து ,அவருக்கு அமுது செய்தனர். அப்போது, அமுது செய்விக்க சித்தம் கொண்டு அப்பூதி அடிகளாரின் , மூத்த திருநாவுக்கரசரை, தோட்டத்தில் உள்ள வாழை மரத்தில் சுருண்ட இலையை கொண்டுவர அனுப்பிவிட்டு இவர்கள், அப்பர் பெருமானிடம் சைவத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தனர்.
சுருள் இலையினை அறுக்க முயன்ற போது அங்கு இருந்த அரவம் அச்சிறுவனை தீண்டியது. அப்போதும், அடியார்க்கு உணவளிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் இலையினை ஒப்படைத்து விட்டு அன்னையின் முன் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார் பெரிய திருநாவுக்கரசர்.
அடிகளாரின் மனைவி ,அப்பூதி அடிகளாரை அழைத்து... விவரத்தை சொன்ன போது, இது நாவுக்கரசர் பெருமானுக்கு தெரிய வேண்டாம் என எண்ணி! மகனை பாயில் சுருட்டி வைத்துவிட்டு, சமையலறையில் ஒளித்து வைத்தனர். திருநாவுக்கரசர் பெருமானை, விருந்துண்ண அழைத்தனர். அவரோ! உங்கள் மூத்த மகனுடன் தான் பந்தியில் அமர்வேன் .எனச் சொல்லி அவனை அழைக்க சொன்னார். என்ன செய்வது என்று தெரியாமல், அப்பூதி அடிகளாரும் நடந்ததை அவரிடம் சொன்னார்கள்.
அச்சிறுவனின் உடலை தூக்கிக் கொண்டு போய் திங்களூரில் உள்ள கோவிலின் முன்னால் "ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை" எனத் தொடங்கிய பதிகத்தை பாடி முடித்ததும், அச்சிறுவன் உயிரோடு எழுந்தான். பெருமானின் சீடனாகிய அப்பர் பெருமானை கொண்டாடிய அடிகளாரின் குடும்பத்துக்கும். திருநாவுக்கரசர் இருக்கும்போதே ஒரு அதிசயத்தை அவர் மூலமாக நிகழ்த்தி காட்டினார் சிவபெருமான்.
சிறுவனை, உயிர்ப்பித்த திருநாவுக்கரசர். அவர்களிடம் விடை பெற்று பல சிவத்தலங்களை தரிசித்த பின்பு, திருவாரூரை அடைந்தார்.
(தொடரும்)