பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்

Aug 11, 2026,10:26 AM IST

- கலைவாணி கோபால்


"திருவதிகை ஆலயத்தில் தொடங்கப்பட்ட தேவாரம்" பல இடங்களில் திருநாவுக்கரசரால் பாடப்பட்டது. 


முதிர்ச்சியினை நோக்கி செல்லும் வயதிலும், ஒவ்வொரு சிவாலயமாக சென்று கொண்டிருந்த திருநாவுக்கரசர். கையில், உழவாரம் என்னும் கருவியினை அதாவது, 'களைவெட்டி 'போன்ற அமைப்பைக் கொண்ட கருவியினைக் கொண்டு, எந்த ஊருக்கெல்லாம் செல்கிறாரோ ! அந்த ஊர் சிவனை பாடுவதோடு மட்டுமல்லாமல், அங்கு, உழவாரப் பணியும் செய்து வந்தார் .


உழவாரப்பணி என்பது, கோவில் குளத்தில் தூர் வாருதல்,ஊர் மக்களைக் கொண்டு ஆலயங்களை சுத்தம் செய்தல், போன்ற ஆலய பணிகள் அனைத்தையும்  செய்து வந்தார்.


சமணர் காலத்தில் சிவ ஆலயங்கள் எல்லாம் பாழ்பட்டு இருந்ததால், அவற்றை சுத்தம் செய்யும் பொறுப்பும் திருநாவுக்கரசர் பெருமானுக்கு இருந்தது. இப்படி ஒவ்வொரு ஆலயமாக அவர் சென்று கொண்டிருந்த ஆலயங்கள் திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவிலூர், முதலான தலங்களுக்கு சென்று பதிகங்கள் பாடி ஆலயங்களையும் சுத்தம் செய்தார்.


அப்படியே, திரு பெண்ணாகடம் அடைந்தார். இந்த இடத்தில் தான் அவர் பெருமானிடம் நான் அடியாராக மாற ரிஷப குறியும் ,சூலகுறியும்   வேண்டும் என்று சிந்தையில் தோன்ற "பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்" என்ற பதிகம் பாடி,  பெண்ணாகடம் பெருமானிடம் விண்ணப்பம் வைத்தார் .




அவரின் விண்ணப்பத்தை ஏற்ற சிவபெருமானும், அவர் விண்ணப்பம் வைத்தபடியே சிவபூத கனத்தினால் அவர் திருக்கரங்களில் சிவ இலட்சனை அடையாளமாக பொறிக்கப்பட்டது. அவருக்கு ரிஷப குறியும், சூலக்குறியும் , அவர் திருக்கரங்களில் சிவ அடையாளமாக பொறிக்கப்பட்டிருந்தது. திருபெண்ணாகடம் கோவிலில் சிவனடியார் என்று அடையாளம் பெற்றார் திருநாவுக்கரசர்.


அடுத்ததாக சோழ நாட்டில் உள்ள திருவரத்துறை, திருமுதுகுன்றம், போன்ற தளங்களை தரிசித்து விட்டு தில்லை என்னும் தில்லையம்பதியை அடைந்தார். இது மகா புனிதமான ஆலயம் என்பதால், கால் படுதல் முறை அன்று; என கருதி உடலால் ,உருண்டு நடராஜர் சன்னதியை அடைந்து ,அவ்வண்ணமே வலம் வந்து பின் அமர்ந்து தில்லைநாதன் மேல் பதிகம் பாடினார் .

 

அங்கு பறவைகளின் கூக்குரல் தன் பெயரை சொல்லி அழைப்பதாக மெய் மறந்து" கருநட்ட கண்டனை அண்டத் தலைவனை கற்பகத்தை" என்னும் பதிகம் பாட ஆரம்பித்தார். தில்லை அம்பலவரின் சன்னதி அவருக்கு கைலாயமாக தென்பட்டது . தில்லையம்பதியைக் கண்டு மகிழ்ந்து, மகிழ்ந்து சலிக்காமல் வணங்கினார். அப்போது அவரின் வயது :70 ,வயதை நெருங்கிக் கொண்டிருந்தது. இளமையில் செய்யாத சேவையை சமணராக வாழ்ந்த  பாவத்தை.... முதுமையில், அங்கு தேவாரம் உழவார பணி செய்து கழித்து கொண்டு இருந்தார்.


"பக்தனாய் பாட மாட்டேன் என்ற முன்னெடுத்து திரு நேரிசை பண்ணிணால்"என்ற தேவாரப் பதிகத்தை பாடி பின், தில்லையினை விட்டு  நீங்கி ,ஆருர் செல்ல ஆவல் கொண்டார். விடைபெறும் நேரம், இன்னொரு பதிகமும் பாடினார். "அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" இப்பதிகத்தை பாடியவுடன் சிதம்பரத்தில் இருந்து திருவாரூர் செல்ல முற்பட்ட போது, ஞான குழந்தையான திருஞானசம்பந்தரின் பெருமையினை அங்கு மக்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கேட்டு ,சீர்காழி சென்று ஞானசம்பந்தரை காண வேண்டும் என நினைத்தார்.


அதே நேரம், சமணராக இருந்து சைவத்துக்கு மாறிய சமணர்களின் பல இடர்களின் பிடியில் இருந்து வெளிவந்த.. திருநாவுக்கரசரை பார்க்க, திருஞானசம்பந்தரும் , ஆவல் கொண்டு இருந்தார்.


இருவருமே, ஒருவரை ஒருவர் காண சித்தம் நினைத்துக் கொண்டிருந்தபோதே சீர்காழியை நோக்கி, திருநாவுக்கரசர் பெருமான் நடக்க.... தன்னை நோக்கி பெரும் அவதாரமே! வருகின்றார். என, சம்பந்தரும் , நாவுக்கரசர் பெருமானை , சீர்காழி எல்லையில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள, சிவத்தில் கரைந்த பழுத்த பழமும் ,ஒரு பிஞ்சும் கண்களால் பேசிக்கொண்டன.... இருவரும் ,ஒருவரை ஒருவர் புன்னகையோடு அனைத்து கொண்டனர். 


"அப்பரே" என வாய் நிறைய ஞானசம்பந்தர். பெருமான் ;அப்பரை நோக்கி அழைக்க.. அந்த வார்த்தையை கேட்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டார் நாவுக்கரசர் பெருமான். சிவனே! என கத்தியபடி சம்பந்தப் பிள்ளையினை மீண்டும் அணைத்துக் கொண்டார் திருநாவுக்கரசர். இருவரும் சீர்காழியில் தோணியப்பர் கோவிலுக்கு  ஒன்றாக சென்று வணங்கினர்.


அப்போது, நாவக்கரசரை நோக்கி... ஞானசம்பந்த பெருமான்   பதிகம் பாடச் சொல்ல அங்கே!" பார் கொண்டு மூடி கடல் கொண்ட "  என்ற பதிகத்தை ஞானசம்பந்தர் கேட்க திருநாவுக்கரசர் பெருமான். மெய்மறந்து பாடினார்...... அங்கிருந்த, கூட்டமும் அதைக் கேட்டு மெய் மறந்து நின்றது.


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்