அழகே அழகாய் அமைந்த அழகோவியமோ நீ!

Su.tha Arivalagan
Sep 04, 2026,11:55 AM IST

- கவிமாமணி ஏரூர் அலாவுதீன் 


பாவையின் பாதங்கள் 

பணிந்து போகையிலே

பாதையோரக் கண்கள் 

பட்டெனத் திரும்பிடுமே....!


பஞ்சு வெடித்துக் 

காற்றில் உலாவுதோ 

நெஞ்சுக் கூண்டுக்குள்

காதல் முளைக்குமே...!




மெழுகுச் சிலையோ 

நீ வானத்துத் தேவதையோ 

நீல வானில் காணும்

பௌர்ணமி நீதானே..!


இதழோர மச்சம் 

கனவிலும் கொஞ்ச

விழிகளின் துள்ளல் 

விழிக்காமல் காக்குமே...


கருங்கூந்தல் ஆடுதோ

காற்றோடுதான் ஊடலோ 

கைவீசி நடந்தாலே

நழுவுதடி மனசே...!


பேசும் மொழியோ 

நீலக்குயிலின் பாசையோ

பாவிமனம் போகுதே

பாவையுந்தன் பின்னாலே...!