கம்சனை கொன்ற கள்ளழகா.... சுதர்சனம் ஏந்திய சுந்தரனே.....!
Sep 04, 2026,11:59 AM IST
- கலைவாணி ராமு
கோகுலத்து நாயகனே கோவிந்தா....
தேவகி நந்தனே தேவர்களின் தலைவனே....
காலிங்கனை அடக்கிய கண்ணபிரானே....
வெண்ணைக்காக பல வேடங்களை போட்ட வேங்கடவா....
மண்ணை உண்ட வாயில் மா உலகத்தை காட்டிய மாதவனே...
கோவர்த்தன கிரியை குடையாக பிடித்த கொற்றவா...
கம்சனை கொன்ற கள்ளழகா....
சுதாமனை நண்பனாக ஏற்றவனே
சுதர்சனம் ஏந்திய
சுந்தரனே.....
பாண்டவருக்கு அருளிய பக்தவச்சலா....
குந்தியின் மருமகனே உன்னை கும்பிட்டு முடிக்கின்றேன் கவிதையை!