உன்னைப் போற்றி வாழ்த்திட உள்ளம் மகிழ்கின்றது!
- டாக்டர் கோ.லதா
பள்ளிக்கல்வி இயக்குனராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள ந. லதா அவர்களை வாழ்த்தி மாநில நல்லாசிரியர் விருதாளர், உலக செந்தமிழ் சங்கம் நிறுவனர் MWRH. AMB. DR. கோ. லதா எழுதிய கவிதை:
தமிழ்த்தாயின் சீரிளந் தவப்புதல்வி வாழ்க!
கல்விக்கண் திறக்கும் கருணை உருவே வாழ்க!
பள்ளிக்கல்வி உலகம் போற்றும் பண்பாளர்!
நற்குணத்தின் நாயகியே நல்லாசிரியர் வாழ்க!
ந எனும் பெயர் கொண்ட நலம்பயக்கும் செல்வி!
லதா எனும் மலர் மணம் கமழும் கொடியே!
அன்னை என அழைக்கும் அருந்தமிழ் மக்களே!
உன்னைப் போற்றி வாழ்த்திட உள்ளம் மகிழ்கின்றது!
கல்வித் துறையின் கடிவாளம் ஏற்றாய்!
கூடுதல் பொறுப்பும் கரமேற்று நின்றாய்!
இயக்குநர் எனும் இணையிலாப் பதவி!
ஏற்றுப் பணிசெய்ய இன்று முன்வந்தாய்!
கல்லாத குழந்தைகள் கல்வி பெற வேண்டும்!
சொல்லாத அறிவும் சுடர்விட்டு ஒளிர வேண்டும்!
பாடத்திட்டம் புதுமை பெற வழிகாட்டுவாய்!
ஆசிரியர் உள்ளம் ஆனந்தம் கொள்ள வைப்பாய்!
தாயின் அன்போடு தமிழ் பயிற்றுவிப்பாய்!
தந்தையின் கண்டிப்பில் தரமுயர்தி நிற்பாய்!
கிராமப் பள்ளிகள் கலங்கரை விளக்காக!
நகரப் பள்ளிகள் நல்லொழுக்க சாலையாக!
அரசுப் பள்ளி அரும்பெரும் கோவிலாக!
மாற்றம் காணும் மகத்தான காலம்!
உனது கரங்களில் உயர்கின்றது இன்று!
நல்லிணக்கம் நாட்டில் நாளும் பெருகிடுக!
கல்வி ஒளியால் காரிருள் அகன்றிடுக!
மாணவர் வாழ்வில் மகத்தான மாற்றம் வருக!
பெண்ணினத்தின் பெருமையை உலகுக்கு காட்டுவாய்!
மண்ணின் மைந்தரை மேதினிக்கு அளிப்பாய்!
கல்வி எனும் செல்வம் கடலினும் பெரிது!
அதனை வழங்கும் அன்னையடி நீயே!
தேர்வின் பயம் தீர்து
ஏழை மாணவர் ஏற்றம் காண வைப்பாய்!
ஆசிரியர் பணியை அர்பணிப்பு ஆக்குவாய்!
பெற்றோர் நம்பிக்கை பெருகிடச் செய்வாய்!
புத்தகங்கள் பேசும் புதுமை படைப்பாய்!
அறிவியல் ஆய்வு அரங்கேற்றி வைப்பாய்!
விளையாட்டு கலை விருதுகள் பெருகும்!
ஒழுக்கம் நிறைந்த ஒப்பற்ற தலைமை!
உன் பணி தொடர உலகம் பாராட்டும்!
உன் பெயர் வரலாற்றில் பொன்னெழுத்தால் ஒளிரும்!
தடைகள் வந்தாலும் தளராத தீரம்!
தர்மத்தின் வழியில் தலைநிமிர்ந்து நட!
கல்விக்கடவுள் அருள் காக்கும் கவசம்!
மாணவர் வாழ்து மாலையாய் சூடும்!
ஆசிரியர் அன்பு அணைபோல் தொடரும்!
அரசின் ஆணையை அழகுற நிறைவேற்று!
தமிழ்நாட்டின் தலைநிமிர்வு நீயன்றோ!
பள்ளிக்கல்வி பொன்னுலகம் ஆக்குவாய்!
வாழ்துகின்றோம் வாழ்க பல்லாண்டு!
வளர்க உன் புகழ் வையகம் போற்ற!
நல்லாசிரியர் கனவு நனவாகட்டும்!
நாடே உன்னை நாளும் வாழ்தட்டும்!
--
உலக நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்
மூச்செனும் உயிர்க்காற்று முதன்மை அறிவாய்!
உள்ளிருக்கும் நுரையீரல் உன்னதக் கோவில்!
ஒவ்வொரு சுவாசமும் ஒளிவிளக்கு ஏற்றும்!
அதனைக் காக்கும் பொறுப்பு அனைவர்கும் உண்டு!
புகையெனும் நஞ்சு புகுந்திடும் போதே!
நுரையீரல் நலிந்து நோய்கொள்ளும் தீமை!
சிகரெட் சுருட்டு சிறுகச் சிறுகக் கொல்லும்!
புகையிலை போதை புற்றாய் மாற்றும்!
தூசியும் மாசும் துளைக்கும் நுரையீரல்!
தொழிற்சாலை புகையும் துன்பம் தருமே!
வீட்டின் அடுப்புப் புகையும் விடாது!
விழிப்பின்றி இருந்தால் வினையாகும் நோயே!
இருமல் நீடித்தால் எச்சரிக்கை கொள்வாய்!
இரத்தம் கலந்து வந்தால் உடனே செல்வாய்!
மூச்சு வாங்குதல் முன்னறி குறியே!
மார்பு வலிக்கும் போது மருத்துவர் பார்பாய்!
ஆரம்பத்தில் கண்டால் அருமருந்து உண்டு!
தாமதம் செய்தால் தளர்ந்திடும் உயிரே!
பரிசோதனை செய்து பயம்போக்கி வாழ்வாய்!
பாதுகாப்பே பெருஞ்செல்வம் என்றறிவாய்!
புகைத்தலை நிறுத்து புண்ணியம் செய்வாய்!
பச்சை மரம் வளர்த்து பாதுகாப்பு தருவாய்!
முகக்கவசம் அணிந்து மாசைத் தடுப்பாய்!
முறையான உடற்பயிற்சி மூச்சை வலுப்படுத்தும்!
ஆழ்ந்து மூச்சிழுத்து ஆரோக்கியம் காப்பாய்!
யோகமும் தியானமும் யாக்கையைக் காக்கும்!
சத்தான உணவால் சக்தி பெருகும்!
சுகாதாரம் காத்தால் சோகம் அகலும்!
உலக நாள் இன்று உரைப்போம் ஒன்றாய்!
நுரையீரல் புற்றை நொறுக்கிட வாரீர்!
விழிப்புணர்வு கொண்டு வீடுதோறும் சொல்வோம்!
விளக்கேற்றி வைப்போம் விழிப்பின் ஒளியை!
அரசும் அமைப்பும் அணிதிரண்டு வருக!
ஆசிரியர் மாணவர் அனைவரும் சேர்வீர்!
மருத்துவர் செவிலியர் மக்களைக் காப்பீர்!
மாசற்ற காற்றை மானுடர்கு தாரீர்!
நாளும் நலமுடன் நாம் வாழ்வதற்கே!
நஞ்சினை விலக்கி நலம்காத்து வாழ்வோம்!
நுரையீரல் காக்கும் நல்லுறுதி கொள்வோம்!
நோயற்ற வாழ்வே நம்குறிக்கோள் ஆகுக!