இன்பத் தமிழே என் இயக்கம் நீயே

Aug 01, 2026,02:54 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


அன்னைத் தமிழே ஆதவனின் ஒளியே !

ஆதியும் நீயே என் ஆறுயிரும் நீயே !

   

முத்தமிழின் முக்கனியான மூலப் பொருளே!

மூத்த குடியின் முதுகெலும்பான பைந்தமிழே!


தெள்ளுத் தழிழே தெவிட்டாத தேனமுதே !

சொற்றுணர்வும் பொருட்டுணர்வும் சுவையூற அழித்தவளே !


கலைமகள் சூடிய கலையாத மகுடமே !

கலைஞர்கள் நாவின் நர்த்தனமே!

 

பிற மொழியினரையும் ஈர்த்திடும் பிள்ளைத் தமிழே !

பிரிவினை அற்ற கன்னித் தமிழே!




உலகம் வியக்கும் உன்னத  

தமிழே!

உவகையோடு உரைத்தேன் நானும் உன்னையே !


தலைக்கனமற்ற இலக்கிய ,

இலக்கணமே!


தமிழரின் தனி அடையாளமே !


தொன்மையான தொடரிசையே !


தொழுவேன் உன்னை அனுதினமுமே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்