தமிழை நேசிப்போர்க்கும்.. சுவாசிப்போர்க்கும்.. யோசிப்போர்க்கும்.. தென் தமிழ்!

Su.tha Arivalagan
Jun 02, 2026,02:31 PM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி


தமிழை நேசிப்போர்க்கும்

சுவாசிப்போர்க்கும்.. 

யோசிப்போர்க்கும்....


இதோ தென் தமிழ்..


வலைதளம் மூலம் நன்தமிழ் வளர்க்கும் தென் தமிழ்


எழுத்தாளர்களை உருவாக்கும் ஊக்குவிக்கும் தென் தமிழ் 


புதியோர்க்கும் முதியோர்க்கும் சிறுவர்க்கும் இல்லத்தரசிகளுக்கும்


சீரிய முறையில் சிறப்பாய் பயிற்சி அளிக்கும் தென் தமிழ்


கதை கவிதை கட்டுரை என படைப்புகளை அள்ளித்தரும் தென் தமிழ் 


உள்ளூர் செய்திகளோடு உலகச் செய்திகளையும் உள்ளங்கையில் கொடுக்கும் தென் தமிழ்




காமெடி காதல் ஹாரர் என


தொடர் கதைகளையும்

தொடர்ந்து தரும் தென்தமிழ்....


நம்‌ தமிழ் எல்லாம் அரங்கேற்றும் தென் தமிழ்...


நீங்களும் தென் தமிழில் சேருங்கள் ...


செந்தமிழ் போற்றுவோம் வாருங்கள்...


வாழிய தென் தமிழ்!


வளர்க தென் தமிழ்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).