படிப்போம்.. பண்படுவோம்.. பயனுற வாழ்ந்திடுவோம்!

Su.tha Arivalagan
Apr 27, 2026,03:17 PM IST

- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா


புத்தக வாசிப்பு மனிதனின் சிந்தனையை வளர்க்கிறது! 

கற்பனை திறனை அதிகரிக்கிறது !

ஆராயும் மனப்பான்மையை உருவாக்குகிறது! 

சிக்கல்களுக்கு தீர்வு காண உதவுகிறது! 

முன்னேற்ற பாதைக்கு நடத்திச் செல்கிறது!

இலக்கை நோக்கி இழுத்துச் செல்கிறது! 

சிந்தனைத் திறன் வளர்கிறது! 

அறிவுக்களஞ்சியம் பெருகுகிறது !

புரிந்து கொள்ளும் பண்பு மேம்படுகிறது!

ஏன்? எதற்கு? எப்படி ?என்று கேள்விகளுக்கு விடை காண முடிகிறது! 




சிறந்த நண்பனாக வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது!

நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்துகிறது! 

முடிவுகளை தீர்மானிக்கிறது! 

வெற்றிக் கொடியை பிடிக்க உதவுகிறது !

சிகரத்தில் ஏற உதவுகிறது!

இதய வானில் கொடி கட்டி பறக்க உதவுகிறது

இன்று நீ தலை குனிந்து படித்தால் 

நாளை நீ தலை நிமிர்ந்து வாழலாம். 

ஒரு புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். 

புத்தகம் தனிமையை இனிமையாக்குகிறது.

வாழ்வின் குறிக்கோளை தீர்மானிக்கிறது. 

சிந்தனையில் புரட்சியை விதைக்கிறது.

படிப்போம்.. பண்படுவோம்.. பயனுற வாழ்ந்திடுவோம்!


(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராக, சிறுகதை, கவிதை, கட்டுரை, வகுப்பறை அனுபவம், நடிப்புத்திறன், பாடல் பாடுதல் போன்ற பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார்.).