எம்மதமும் சம்மதம் என்று அனைவரும் வாழ முயற்சி செய்வோமா?

Su.tha Arivalagan
Dec 25, 2025,10:33 AM IST

- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ 


நாம் அனைவரும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என்று ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதத்தை மட்டும் சிறப்பாக கொண்டாடாமல், நாம் அனைவரும் அனைத்து மத நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை போற்றுவோம்.


நான் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.


பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் நண்பர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த மதத்தையும், ஜாதியையும் பார்க்காமல் பழக வேண்டும் என்பதை குழந்தைகளிடம் சொல்லி வளர்ப்போம்.



நாம் நம் மதத்தில் உள்ள கோயில்களுக்கு செல்வதைப்போல் பிற மதத்தைச் சார்ந்த தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் குடும்பத்துடன் செல்ல வேண்டும் .




ஒவ்வொரு வருடமும் எனது அப்பாவின் கிறிஸ்துவ நண்பர் ஜான் மாமா கேக் மற்றும் இனிப்புகள் வாங்கி கொடுத்து செல்வார்கள்.


அவர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் சொல்லி அனுப்புவோம்.


எங்களுக்கு தெரிந்த கிறிஸ்தவ உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் கிறிஸ்தவ தின வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ச்சியடைவோம். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலயங்களுக்கு  குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சி அடைவோம்.


நாம் அனைவரும் ஒரே இந்தியதாய் மக்களாக வாழ்வோம். உலகப் பொதுமறையாம் திருக்குறளில்  கூறியதைப் போல் நாம் அனைவரும் எல்லா மதத்தினருக்கும் பொதுவாக வாழ்வோம்.




சாதி, மத, மொழிப் பாகுபாடுகளைக் கடந்து, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உயரிய சிந்தனையுடன் ஒற்றுமையைப் பேணுவோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாட்டின் பலம். அன்பையும் அறத்தையும் இரு கண்களாகக் கொண்டு, ஒருவருக்கொருவர் துணையாக நின்று இந்திய மண்ணைப் பெருமைப்படுத்துவோம்.


மதங்கள் காட்டும் நல்லறங்களைப் போற்றி, மனிதநேயத்தை மட்டுமே மாண்பாகக் கொண்டு செயல்படுவோம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப, ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தைப் படைப்போம். நம்மிடையே உள்ள பன்முகத்தன்மையே நம் தேசத்தின் அழகு என்பதை உணர்ந்து, வெறுப்பினைத் துறந்து விருப்புடன் கைகோர்ப்போம். இந்தப் பாரத மண்ணில் அமைதி நிலவவும், அடுத்த தலைமுறைக்கு ஒரு வளமான, ஒற்றுமையான தேசத்தை விட்டுச் செல்லவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.


நீங்களும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு உங்கள் குழந்தைகளை  அழைத்து செல்வீர்களா?