பாடம்
Apr 01, 2026,12:45 PM IST
- மு.பாரதி
தமிழ்
ஆங்கிலத்தில்
மொழியை
கற்றேன்
கணிதத்தில்
சூத்திரத்தை
கற்றேன்
அறிவியலில்
ஆய்வுகளை
கற்றேன்
வரலாற்றில்
பண்டைய
வரலாற்றை
கற்றேன்
புவியியலில்
பூகோளத்தை
கற்றேன்
இயற்பியலில்
இயக்கவியலை
கற்றேன்
வேதியியலில்
வேதிய மாற்றத்தை
கற்றேன்
உயிரியலில்
உயிர்களின்
பரிமாற்றத்தை
கற்றேன்
வணிகவியலில்
வணிகத்தை
கற்றேன்
கணக்கு பதிவியலில்
கணக்கு
பதிவை
கற்றேன்
கணிப்
பொறியியலில்
செயற்கை நுண்ணறிவை
கற்றேன்
பொருளாதாரத்தில்
நாட்டின்
பொருளாதாரத்தை
கற்றேன்
எல்லா பாடங்களையும் வகுப்பறையில்
பாடத்தில்
கற்றேன்
ஆனால்
மனிதனாக
அறத்துடனும்
பொறுப்புடனும்
சகிப்புத் தன்மையுடனும்
சமூக அக்கறையுடனும் வாழ
என் ஆசிரியரை
கண்டு
கற்றேன்
ஆசிரியரே
சிறந்த
புத்தகம்
ஆசிரியரே
சிறந்த
வழிகாட்டி
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை -64, செங்கல்பட்டு மாவட்டம்)