நீதியின் அரசனாக கருதப்படும் சனி பகவான்.. சனிப் பெயர்ச்சி - விளக்கம்!

Su.tha Arivalagan
Mar 06, 2026,01:00 PM IST

- தி.மீரா


இன்றைய நாகரிக உலகத்தில் அறிவியல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஜோதிடம் மக்களிடம் இரண்டு விதமாக உள்ளது.


முழுமையாக அதை மட்டுமே நம்பி இருப்பவர்களும் உண்டு.சுத்தமாக நம்பாதவர்களும் உண்டு.அரைகுறையாக நம்புவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


எது எப்படி இருந்தாலும் ஜோதிடம் எனப்படுவது வேதத்தின் கண் எனப் போற்றப்படுவது.பூமியில் வாழும் நம்மை வான் வெளியில் கோள்கள் ஆதிக்கம் செய்கின்றன என்பதை எந்த தகவல் தொழில்நுட்பம்  அறிவியல் முன்னேறாமல் இருந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிக அழகாக ஆராய்ந்து அறிந்து சூரியன் சந்திரன் ஒவ்வொரு கோள்களின் நகர்வை வைத்து அமாவாசை பௌர்ணமி கிரகணம் என அனைத்தையும் ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள். இன்றும் துல்லியமாக உள்ளது. NASA கணக்கிடுவதும் இதுவும் சரியாக உள்ளது.


அப்படியிருக்க ஜோதிடம் தற்காலத்தில் வியாபார நோக்கில் செல்வதும் மக்களும் உழைக்க மறுத்து வாழ்வின் அடிப்படையை மறந்து சுக துக்கங்களை ஏற்க மனமில்லாமல் மிகவும் ஏமாற்றுவதும் சோம்பேறியாக மாறுவதும் பார்க்கிறோம்.




உண்மையில் ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே. அது முற்றிலும் ஒரு அற்புதமான கணிதத்தால் 

கணிக்கப்பட்டுள்ளது. வானியல் சாஸ்திரத்தில் ஜோதிடம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.


அந்த வகையில் ஒன்பது கோள்களும் நம்மை ஆட்சி செய்கின்றன. அதில் சனி கிரகம் மிக மெதுவாக நகரக் கூடியது. மொத்தம் 12 ராசிகளை  ஒரு முறை கடக்க 30 வருடம் ஆகிறது. இந்த சனி கிரகம் நீதி அரசனாக கருதப்படுகிறது.


வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் நன்மை தீமைகள் அவரவர் செய்த செயல்களினால்  தீர்மானிக்கப் படுகிறது.இந்த சனி கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை சனிப் பெயர்ச்சி என்கிறோம்


இந்த வருடம் 6/3/26 அன்று  சனிப் பெயர்ச்சி நடக்கிறது. இன்று அனைத்து ஆலயங்களிலும் சனிப் பெயர்ச்சி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.தர்ப்பாணேஸ்வர் ஆலயம் திருநள்ளாறு குச்சானூர் சனி பகவான் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் ஆலயம் மிகச் சிறப்பான விழாக்கள் நடக்கும்.


சனிக் கிரகமானது ஜோதிடத்தில் நீதியரசர் எனக் கருதப்படுவதால் தவறு செய்பவர்களை தண்டிப்பார்

என நம்பப்படுகிறது .ஆதலால் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கேற்ப நமது நல்ல  செயல்கள் செய்ய வேண்டும் என்பதை இந்த சனிக் கிரகம் வலியுறுத்துகிறது என்கிறது ஜோதிடம். 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு.


ஆன்மீகம் ஜோதிடம் ஒருவனை நல்ல முறையில் வாழ்வதற்காக கோள்களின் மூலம் வலியுறுத்துகிறது. ஆலய வழிபாடு மனிதனின் மன மாற்றத்திற்கு உதவுகிறது.நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது என்பதை மறுக்க முடியாது.சனிப் பெயர்ச்சி நாளில் ஆலயம் செய்வோம் நல்ல மனவளத்தைப் பெறுவோம். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.மனிதநேயத்தோடு வாழ்வதற்கே அனைத்து வழிபாடுகளும் ஜோதிடமும்.


அதிசயம் ஆனால் உண்மை நாம் பார்த்த ஆகாயத்தில் 6 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருந்தன.அதே போல் ஜோதிடத்தில் கும்ப ராசி கட்டத்தில் ஒரே ராசியில் 6 கிரகங்கள் சேர்ந்து இருந்தன. இதைத் தான் நம் முன்னோர்கள் பல நூற்றாண்டின் ஆராய்ச்சியில் கோள்களை பற்றி மிக நன்றாக தெரிந்து வைத்திருந்தனர்.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)