மறுபிறவி இருக்கிறதா? (Are there many Births?)

Mar 06, 2026,05:57 PM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


மறுபிறவி  இருக்கிறதா?.. காஷ்முஷ்.. அவருக்கு இந்த கேள்வி வந்தது.. பல ஞானிகளுடைய புத்தகங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து படித்து தனக்குள்ளே விவாதித்து அவரால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை..


அவருடைய ஊருக்கு ஒரு ஞானி வந்திருந்தார்.. அவருடைய சொற்பொழிவிற்கு பிறகு அவர் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக அறிந்தார்..காஷ்முஷ்-ம் அந்த சொற்பொழிவிற்கு சென்று ஞானி பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார்..


அன்றைய சொற்பொழிவில் மனிதர்களைப் பற்றி ஞானி பேசிக் கொண்டிருந்தார்.. எல்லா மனிதர்களுக்கும் ஒரு மைய (சென்டர்)  இருப்பு இருக்கிறது.. ஆனால் பொதுவாக மனிதன் தன் இருப்பை விட்டு விலகியே இருக்கிறான் சில சமயம் மிக அதிகமாகவும் சில சமயம் மிக அருகிலும் சில கணங்களில் தன் மையத்திற்கு வருவதாகவும் சொன்னார்..


தன் மையத்தில் இருந்து மிகவும் விலகி இருப்பவன் ஒரு பைத்தியக்காரன் என்று சொல்லலாம்.. அவன் இந்த க்ஷணத்தில்  (Present Moment) இருப்பதில்லை.. தன்னுடைய கனவுகளில் வசிக்கிறான்.. அவன் நிகழ்காலத்திலும் இருப்பதில்லை.. Reality ல் இருப்பதில்லை..




அடுத்த வகையினர் தனக்கென திடமான பிம்பத்தை கொண்டிருப்பார்கள்.. டாக்டர், இன்ஜினியர், வக்கீல், சமயவாதி அரசியல்வாதி என்று ஒரு இமேஜ் வைத்துக்கொண்டு அதைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பார்கள்.. 


அடுத்த வகையினர் கலைஞர்கள்.. ஓவியர் இசைக் கலைஞர்கள் நடன கலைஞர்கள் இவர்களுக்கு திடமான இமேஜ் இருக்காது.. அவர்களுடைய Identity திரவத்தைப் போன்றது.. அவர்கள் தன்னுடைய இருப்பிற்கும் பைத்தியக்கார நிலைக்கு மிக வேகமாக சென்று வரக்கூடியவர்கள..


நான்காவது வகையினர்.. புத்தா இயேசு கிருஷ்ணா இவர்களைப் போன்றவர்கள்.. தங்கள் இருப்பு மையத்திலேயே எப்பொழுதும் இருப்புக் கொண்டிருப்பவர்கள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு இவர்களும் நார்மலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..


பசித்தால் சாப்பிடாமலா.. இருப்பார்கள்.. இவர்களுக்கும் வேலை ஒன்று இருந்தால் அதையும் செய்து கொண்டிருப்பார்கள்.. நார்மலாக மனிதர்கள் சாப்பிடும் போது சிந்தனையோடு சாப்பிடுவார்கள்.. புத்தாக்கள் சாப்பிடும்போது சாப்பிடுவதில் மட்டும் கவனம் இருக்கும்... இந்தக் கணத்தில் இருப்பவர்கள்… வாழ்பவர்கள் என்று சொல்லலாம்.. ( The quality of everything they do is different)..


காஷ்முஷ் ஒரு இசைக் கலைஞராக இருந்தார்.. அவருக்கு தான் இந்த ஆயுளில் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் அப்படியே வைத்துக் கொண்டு அடுத்த பிறப்பு எடுக்க வேண்டும் என்று ஆவல்..


இதையே அந்த குருவிடம் கேட்டார்.. குரு சொன்னார்.. மறுபிறப்பு என்று ஒன்று இருக்கிறது என்று நம்புகிறாயா? 


அடுத்த கேள்வி காஷ்முஷ் கேட்டார்.. இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்தும் மறு ஜென்மம் இருக்கிறது என்று சொல்கிறது, அதனால் நான் அதை நம்புகிறேன் 


அடுத்த கேள்வியும் கேட்டார்.. மேற்கத்திய நாடுகளில் தோன்றிய கிறிஸ்துவ முகலாய மதங்கள் மறு ஜென்மம் இல்லை என்று சொல்கின்றன..


புத்தாவும் இயேசுவும் கிருஷ்ணாவும் ஒன்றே என்றால் யார் சொன்னது சரி என்று கேட்கிறார்..


குரு பதில் சொல்ல ஆரம்பித்தார்..


காஷ்முஷ், நீ ஒரு புத்திசாலி தான்.. உன் முதல் கேள்விக்கான பதில்.. நீ ஆயிரம் ஜென்மம் எடுத்து வந்தாலும்.. இங்கு இருப்பதில் இசையில் 10 விழுக்காடு கூட கற்றுக் கொள்ள முடியாது.. புதிது புதிதாக ஏதேனும் வந்து கொண்டிருக்கும் ஆனால் அதுவும் பழையது தான்.. வந்தவுடன் அது பழையதாகி விடுகிறது..


நான் சொல்கிறேன்.. கடந்த ஏழு ஜென்மங்களாக இதேதான் நீ செய்து கொண்டிருக்கிறாய்.. ஒன்றும் புதிதாய் செய்யவில்லை என்றால் இப்போது என்ன செய்யப் போகிறாய்?


புத்தரும் சரிதான் இயேசுவும் சரிதான்.. என்று சொல்ல..


காஷ்முஷ் திரும்பவும் கேட்கிறார் அது எப்படி? லாஜிக்கலாக எதிர்மறையான பதில்கள் எப்படி சரியாக முடியும்? 


வசதியான, கல்வியறிவு உடைய மற்றும் எல்லா சுகங்களையும் அனுபவித்த மனிதனிடம் இன்னும் பல பிறவிகள் உண்டு.. ஆனால் திரும்பத் திரும்ப இதேதான் என்று சொன்னால் அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.. இந்த ஜென்ம சுழற்சியில் இருந்து எப்படி வெளிவருவது என்றுதான் கேட்பார்கள்... சலிப்பு (Boredom ) அவனை தாக்கும் மிகப்பெரிய விஷயம்..


அதிகம் படிப்பறிவு இல்லாத கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை மனிதர்களுக்கோ.. படிப்பறிவு பெற்றுவிட்டால்.. செல்வ வசதி உள்ளவர்கள் ஆனால்.. தான் மோட்சத்தை அனுபவிப்போம் என்ற ஆசையே மேலோங்கி இருக்கும்.. அவர்களிடம் இன்னும் பல ஜென்மம் உள்ளது என்றால் இந்த ஜென்மமே தாள முடியாததாய் இருக்கிறது என்று தோன்றும்.. 


அவர்களிடம் பேசிய இயேசு கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.. உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று பேசினார்..


இவர்களுடைய பதில்கள்.. ஒரு கருவியே (It's a device)  அன்றி… உண்மையா பொய்யா என்று விவாதிப்பதற்காக அல்ல.. மனிதன் தன் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் .. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டவை.. அதனால் இரு பதில்களும் சரியே..


இது உனக்கு புரிகிறதா என்று முடித்தார்..


நாம் தொடர்வோம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?

news

திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்

news

கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி

news

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்

news

Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!

news

வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!

news

சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !

news

எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!

news

The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!

அதிகம் பார்க்கும் செய்திகள்