காதல் .. காட்சி கவர்ச்சியின் நேர்ச்சிப் பூக்கள்.. ஆயிரம் உணர்வுகளின்.. அற்புதத் தூண்டல்கள்!
- எம்.கே. திருப்பதி
காதல்
காட்சி கவர்ச்சியின்
நேர்ச்சிப் பூக்கள்
ஆயிரம் உணர்வுகளின்
அற்புதத் தூண்டல்கள்
வளர்சிதை மாற்றம் போல்
மனநிலைகளின்
மாய மாற்றங்கள்
காதல் ஹார்மோன்கள்
ஹார்மோனியம் வாசிக்கும்
மன்மதன் அன்புகள்
என்புகள் துளைக்கும்
நெஞ்சு குழிக்குள்
பட்டாம்பூச்சிக் கூட்டங்கள்
படபடத்துத் திரியும்
வானம் வசப்படும்
வாழ்க்கை நிலைப்படும்
காணும் யாவும்
கவிதையின் ஊற்றுகள்....
காதல் பசுக்கள்
வீரத்திமில் விடைகளை
மோழையாக்கும்
கோழை விழுங்கும்
கோழையை
கோபம் கொள்ள வைக்கும்
கிளியோபாட்ரா போன்ற
கிளிகளுக்கு
காதல் ஆயுதமானது
அம்பிகாபதி அமராவதி
இவர்கள் காதல்
இன்றளவும் பேசப்படும்
காவிய காகிதமானது
காதல்
சமத்துவ எழுச்சி
சமூக கவர்ச்சி
சாதிமதம் பார்க்காத
சகத்தின் உயற்சி...
பெண்ணை கண்டோம்
கவலை மறந்தோம்
பெண்ணை கண்டோம்
கவிதை வரைந்தோம் '
என்கிறார்
காவியக் கவிஞர்வாலி!
நோதலில் கூட
காதலும் உண்டு
மோதலில் கூட காதல்
முளைப்பதும் உண்டு!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)