- வி.ஆர். விஜயலட்சுமி
காதல் என்பது அன்பு
காதல் என்பது பாசம்
காதல் என்பது நேசம்
காதல் என்பது கருணை
காதல் என்பது அனுசரனை
அதனால்
தாயிடத்தில் காதல் செய்.
தந்தையிடத்தில் காதல் செய்
தமக்கை இடமும் காதல் செய்
தனயன் இடத்தில் காதல் செய்.
தகுந்தோர் இடத்தில் காதல் செய்..

தன்னிடத்தில் காதல் செய்
உன்னிடத்திலே காதல் செய்
உயிர்கள் அனைத்திடமும் காதல் செய்
உவகையாக காதல் செய்
மனிதனிடத்தில் மனிதனும்
மனைவியிடத்தில் கணவனும்
கதிரவனிடத்தில் கோள்களும்
மேகத்தின் இடத்தில் நீர் துளியும்
வானத்தினிடத்தில் கரு மேகங்களும்
பூமியின் இடத்தில் நிலவும்.
இயற்கையிடத்தில் ஆர்வலரும்
இறைவனிடத்தில் மனிதர்களும்
காதல் செய்வது நலம் பயக்கும்.
நாளும் நமக்கு உயர்வளிக்கும்.
காமம் இல்லாக் காதலே சிறப்பாகும் ...
எதிர்பார்ப்பற்ற காதலே ஏற்றதாகும்
எதையும் கொடுத்து காதல் பெறாதே !!!
காதலுக்காக எதையும் கொடுக்க மறவாதே !!!
ஆதலினால் இளைஞர்களே!!! யுவதிகளே!!!!
ஆதலினால் இளைஞர்களே யுவதிகளே!!!
காதல் செய்வீர் இன்றே !!! காதல் செய்வீர் இன்றே!!!
மாயக் காதல்வலையில் மாட்டிக் கொண்டு மடியாமல்.
தத்தளித்து தன்னுயிர் இழக்காமல்.
காதலர் தினத்தைக் களிப்போடு கொண்டாடி
உலகம் போற்ற வாழ்ந்திடு நீ
(வே.ர.விஜயலட்சுமி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம் மாவட்டம்)
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?
கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?
Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?
{{comments.comment}}