அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!

Aug 19, 2026,04:53 PM IST

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ உடுமலை ஜெயக்குமாரின் பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் ஆவேசமாக பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், திமுக உறுப்பினர் உடுமலை ஜெயக்குமார் பயன்படுத்திய வார்த்தைகளுக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டார். 


சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர், "அடிக்கக் கை ஓங்குறாங்க. என்னவெல்லாம் வார்த்தை பேசுகிறார்கள்? 'பைத்தியம் மாதிரி பேசுறாங்க' என்று கூறுவதும், ஒருமையில் பேசுவதுமாக இருக்கிறார்கள். மேலும், வாடா போடா என மரியாதை குறைவாகப் பேசுவதை அவர்கள் உடனடியாகத் தவிர்க்க வேண்டும்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.




மேலும் தனது பேச்சில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகளை ஒப்பீட்டுப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்களையும் நிர்வாகிகளையும் முழுமையாக 'கண்ட்ரோல்' செய்வதற்குத் தலைவர் விஜய்யின் ஒரு பார்வையே போதுமானது. ஆனால், அதற்கு மாறாக திமுக உறுப்பினர் சட்டப்பேரவையில் அடிக்கப் பாய்ந்து கொண்டு வருகிறார்; கையை ஓங்கிக் கொண்டு வருகிறார் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்ட முன் வைத்தார்.


சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் பேச்சைக் குறிப்பிட்டு அமைச்சர் ஒருவர் இவ்வாறு கடுமையான வார்த்தைகளால் ஆவேசமாகப் பதிலளித்த சம்பவம் சட்டமன்ற வளாகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகளின் பேச்சு வழக்கு குறித்த விவாதங்களை இந்தச் சம்பவம் மேலும் அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!

news

தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்

news

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை

news

தேடி தேடி அலையும் மனசு நொந்து தொலையும்!

news

Poem: இருமனம் இணைந்த காவியம்

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

அதிகம் பார்க்கும் செய்திகள்