- கவிஞர் க.முருகேஸ்வரி
கவிஞர் க.முருகேஸ்வரி எழுதிய காதலர் தின சிறப்பு கவிதை.

காதலால் காதலுற்ற
காதலனைக்
காதலுடன் காதலிக்க
காதல் தேடி காதல் கொண்டு
காதலோடு காதலி சென்று
காதலும் காதலுற்று
காதலியுடன் கைகோர்த்து நின்று
காதலனைக் காதலால் தின்று
காதல் செய்து காதல் வென்று
காதலால் காதலாகிக் காதலும்
காதலுடன் காதலுள் கசிந்துருகிப் போகுமே...
ஆதலால்..
காதலில் மருகி
காதலால் உருகி
காதலைப் பருகி
காதல் வடித்து
காதல் படித்து
காதலைக் குடித்து
காதல் வரைந்து
காதலால் கரைந்து
காதலில் நனைந்து
காதல் ரசித்து
காதலை ருசித்து
காதலில் வசித்து
காதலை சுவைத்து
காதலால் களைத்து
காதலில் திளைத்து..
காதல் செய்வோம்
காதல் செய்வோம்.....
காதல் ஒன்றும் குற்றமில்லை ....
கால நேரம் கருதாமல் ...
சாக்கு போக்கு சொல்லாமல்....
பாவம் புண்ணியம் பார்க்காமல் ...
அபத்தம் கிபத்தம்
என்று உளறாமல்...
காதலித்துப் பார்....
காதலுற்றுப் பார்
காதல் செய்து பார்
காதல் தோற்றுப் பார்...
காதல் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை ...
வேண்டுமானால்
கற்றுக் கொள்...
இல்லையேல்
கற்று மற....
காதலும் கற்ற மற....!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?
கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?
Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?
{{comments.comment}}