- கவிஞர் க. முருகேஸ்வரி
என்னடா இது Hug day.... இது எல்லாம் தேவையா என்ற எணணம் தான் எனக்கு இருந்தது. அத்தனையும் தவிடு பொடியானது ஒரு நொடியில்....
ஆம், ஆறாம் வகுப்பு மாணவிகள் இடைவேளை நேரங்களில் என்னைப் பார்த்துப் பேசிவிட்டு செல்வது வழக்கம்.
இன்றும் அவ்வாறே நடந்தது.

மிகவும் அமைதியான பயந்த சுபாவம் உள்ள ஒரு மாணவி..... இன்னொரு மாணவியிடம் கூறி ... இன்னிக்கு Hug day ,நான் மிஸ்ஸ Hug பண்ணலாமா.....என்று கேட்க சொல்லியிருக்கிறாள். எனக்கு ஒரே ஆச்சரியம் வேறு மாணவிகள் கேட்டிருந்தால் எனக்கு அப்படி தோன்றியிருக்காது.சென்ற வருடம் நண்பர்கள் வரைந்து அவர்களின் நல்ல குணங்கள் எழுதும் ஒரு செயல்பாட்டில் என்னை வரைந்து என்னைப் பற்றி எழுதினாள்.., அதுவும் கரும்பலகையில்....அதற்காக நான் கொடுத்த Hug ற்கு தயங்கியவள் தான் இவள்.....ஒரு நிமிடம் அப்படியே உறைந்து விட்டு கூப்பிடு என்றேன்.
அவள் வந்ததும் அப்படியே இறுக்கி அனைத்துக்கொண்டேன்.அவளும் என்னை ஆரத் தழுவிக் கொண்டாள்..... உடனே அனைத்து மாணவிகளும் ஒருவர் பின் ஒருவராக வந்து ஆளாளுக்கு அணைத்துக் கொண்டனர்....
Hug ன் உண்மையான அர்த்தம் இப்பொழுது எனக்கு புரிந்தது... அன்பால் ஆரத் தழுவுதல் .... யார் யாரை வேண்டுமானாலும்....
நான் என்ன தான் கண்டிப்பாக இருந்தாலும் சில நேரங்களில் கடக் என கரைந்து விடுகிறேன்.... கரைத்து விடுகிறார்கள் என் மாணவச் செல்வங்கள்....
Hug day மட்டும் அல்ல ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக என் மாணவச் செல்வங்களிடம் இருந்து ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன்.
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?
கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?
Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?
{{comments.comment}}