இதயமானவன்!

Su.tha Arivalagan
Mar 21, 2026,12:22 PM IST

- ரதி தேவி


அன்பிற்கினிய என்னவன்

என் கரம் பிடித்தாயே நீயே என் உலகம் என்று 

நானே உனக்கு உயிர் என்று 


நீ போட்ட முடிச்சிலே 

இறுக்கமாக பற்றியே உன்னுள் இருக்கின்றேனே 


உன் கைக்குள் என் இதய கரங்களை பற்றி 

பிடித்து உள்ளாயே என்னவனே 


யாதுமாக இருக்கின்றாயே 

யாவையுமாக இருக்கின்றேனே 


கோபம் உன்னுள்ளே

கொஞ்சல்களும் உன்னுள்ளே 




கோடி கோடி கொடுத்தாலும் 

கிடைக்காதே என்னவனே


உள்ளங்கையில் தாங்குகின்றாய் 

உலகையே மறக்கின்றேனே 

உந்தன் பேரன்பினிலே 


ஏழேழு ஜென்மங்களுக்கு 

நீயே வேண்டும் என்னவாக 

என் மன்னவனாக 

என் கணவனாக 

யாசகமாக கேட்கிறேன்!