இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!

Su.tha Arivalagan
Nov 13, 2025,04:45 PM IST

- யோகா பேராசிரியர் மு.மஞ்சரி


இயற்கையை அழித்து, வாழ்ந்திட நினைத்தால் நியாயமா? 

மடியினில் சுமப்பவள் மனதினை வதைத்தால் தாங்குமா?

இறைவன் தந்த இந்த இயற்கையினை உந்தன் நெஞ்சம் மறந்ததேன்? 

சோலை வனமும் அதன் மகரந்தமும் நாம் இழந்து தவிப்பது ஏன்?

இன்னும் கொஞ்சம் யோசித்தால் 

இயற்கையை நேசித்தால் 

சொர்க்கம் என பூமியை மாற்றலாம் 

நீயும் நானும் உலகின் வளங்களை போற்றி போற்றி காப்போம். 

வானும் மண்ணும் இனிவரும் உயிர்களை போற்றி போற்றி காப்போம். 

வானவில் யாவும் மறைந்து கரைந்து போனதே. 




வண்டும் குருவியும் காற்றலை கதிர்களில் மடியுதே. 

ஏன் இந்த சோகம்? 

உயிர்களின் சாபம், அலைகளும் வாழ்ந்திட ஏங்குதே. 

பிறந்தது தவறா? இறப்பது சரியா? வாழ்விடம் தேடி வருந்துதே. 

மாற்றம் கொள்வோம். மன்னுயிர் காப்போம்.

நம்ம பூமி .இது நம்ம பூமி. 

ஏற்றம் கொண்டு இமயமும் வாழ்ந்திட இது நம்ம பூமி இது நம்ம பூமி. 

வாழும் உலகில் குப்பைகள் சேர்ந்தால் நியாயமா? 

உன் வீட்டை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா?

நோய்களும் ஏனோ வாழ்வது வீனோ.

கங்கையும் தினமும் கலங்குதே .

ஆலை‌புகையில் ஆறுதல் தேடி ஆக்சிஜன், இங்கு அலையுதே. 

நதிகளை சுத்தம் செய்வோம். வாழ்வோம். 

நம்ம பூமி. இது நம்ம பூமி.

பசுமைகள் அலைந்திடும், வயல்வெளி உன் பசி போக்குதே. 

அதை பட்டா போட, உன் மனம் ஏங்குதே.

உரம் என்ற விஷத்தை நிலங்களில் விதைத்தால், இது தான் சொர்க்க பூமியா?

வானிலை மாறுதே. பனிமலை கரையுதே.

உலகினை காத்திட வழி இல்லையா?

வயல்கள் யாவும் வியர்வையில் நனைப்போம்.

நம்ம பூமி .இது நம்ம பூமி. 

உலகம் யாவும் பசுமையை விதைப்போம். 

நம்ம பூமி .இது நம்ம பூமி