அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு
சென்னை: கல்வி வளர்ச்சி நாள் அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மில் கொண்டாடப்பட்டது.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி அம்மா 2025-2026 ம் கல்வியாண்டில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நூறு சதவீதம் அளித்த ஆசிரியர்களுக்கு சிறப்புச் செய்தார்.
மாணவர்களுடன் கலந்துரையாடினார்.சிறப்பு விருந்தினர்களாக எம் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் குருவேல் அறக்கட்டளை, பிபிஆர் நலச்சங்கம் மற்றும் நலம் செய விரும்பு அறக்கட்டளையின் அனைத்து திருவாளர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
குருவேல் அறக்கட்டளை பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசுத் தொகை வழங்கி சிறப்பு செய்தது.
விழாவை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்பாடு செய்தனர்.
செய்தி: மு. பாரதி