- முனைவர் தி. தங்கலட்சுமி
வாழ்நாள் சாதனையாளர் உயர்மிகு. மதனகுமாரி அம்மா அவர்கள், அவர்களின் தொடர் சேவைகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சாதனையாளர்!
முப்பதைந்து ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி கல்விச் சேவை செய்து சிறந்து விளங்கும் கல்விச்செம்மல்! சமூக சேவைகள், பொதுநலத் தொண்டுகள் செய்யும் சமூக சேவகர்!
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ள மனிதநேய காப்பகக் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அன்னதான சேவையாக அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பலசரக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் தீபாவளி பண்டிகை போன்ற விழாக் காலங்களில் அங்கு உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஆடைகள், இனிப்பு வகைகள், பட்டாசுகள் என்று வழங்கி சிறப்பாக சேவைகள் ஆற்றிவரும் தாயுள்ளத்தில் சிறந்து விளங்கும் சேவைத் தாய் இவர்!
இவர்களின் பிறந்த நாள் இன்று ஜூலை 20. அம்மாவை இப்பொன்னாளில் மனதார வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மதனகுமாரி அம்மா

பெருமைமிகு அம்மாவை பெருமிதத்துடன் வாழ்த்தி வணங்கி மகிழ்பவர்கள் ஸஹஜ ஸமாதி யோகா என்னும் SSY குடும்ப அன்பர்கள்
ஜெய் குரு தேவ்
இடையறாது பொழியும்
அடைமழையென
தொடர் கொடை நல்கி
கருணை கனி சிந்தும்
கற்பக விருட்சம்!!
குளிர் ஓடையென நிதி நல்கி
புத்தாடை பலகாரம் பட்டாசு பல தந்து
பண்டிகை தினத்தை
பல்லோரும் கொண்டாடி மகிழ்ந்திட
தீப ஒளி நாளில் தன்னொளியால்
நேச வாசம் வீசம் நவநீதம்!!
இமயத்தின் உச்சியிலிருந்து
பொங்கிடும் தூய கங்கை நதி பிரவாகமென
குணக்குன்றாய் ஓங்கி உயர்ந்து விளங்கும்
இவரிலிருந்து பொங்கும்
கருணை கங்கையில் நீராடி
புனிதமடைந்த பள்ளிச் சிறார் பற்பலர்!!
வாழ்நாள் சாதனையாளர்
விருது வென்ற
வியத்தகு பெண்மணியை...
கொடைகளால் சிறந்தவரை
இமயமும் அண்ணாந்து
வியந்து பார்த்து ரசிக்கும்!!
அழகோடு அன்பெனும்
பெருங்கருணையும்
சகல கலைகளின் வித்தகத்தோடு
பேரார்வப் பெருக்கும் கொண்டவரை
பெருங்கடலும் பார்த்துப்
பெருவியப்பில் ஆழும்!!
வெளித்தோற்றத்திற்கு
சாதாரணர்!
குரு கற்றுத் தந்த
சாதனைகளை
சதாசர்வ காலமும்
சாதித்துக் காட்டும்
உன்னத சாதகர்!!
இரவின் இருளில்
ஒளிரும் தாரகை
கூட்டத்தில் தனித்து மிளிரும்
விடிவெள்ளி போல...
கோடி கோடி மக்களிடையே
மின்னி மிளிரும்
பொன்னொளிர் தான தேவதை
மதனகுமாரி எனும் தங்கத் தாரகை!!
பண்பென்னும் பெருங்கோயிலின்
ராஜகோபுரமாய் நிமிர்ந்து நிற்கும்
தங்கக் கலசமே!!

உந்தன்
அன்பாலயத்தின்
கருவறையில் நுழையும்
பாக்கியம் கிடையாவிடினும்
இதய பீடத்தில் இடம் பிடிக்கும்
பாக்கியம் கிடைத்தமை
எந்தன் நற்பேறே!!
பிறந்தநாள் வாழ்த்துக் கூறி
கவிச்செண்டு தந்து
ஆசி வேண்டி
வணங்கி மகிழ்கிறேன் அம்மா!!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}