ஐம்பூதங்கள்!

Su.tha Arivalagan
Mar 19, 2026,12:17 PM IST

- எம். பாரதி


யார் கூறியது


நிலம்

நீர் 

நெருப்பு 

காற்று 

ஆகாயம் 


ஐம்பூதங்களை


கற்று தெரிந்து

கொள்கிறோம் என்று


நிலம்


தாய் கருவறை அல்லவா


நீர் 


தாய் வயிற்றில்  சேய்

மிதக்கின்ற அம்னோடடிக் திரவம் அல்லவா




நெருப்பு 


பத்து மாதம்  தாய்க்கு ஏற்படும் 

மாற்றம்

ஆற்றல் அல்லவா


வாயு


தாயின் தொப்புள் கொடி அல்லவா


ஆகாயம்


கருவறை ஆகாயம் அல்லவா


கூறுங்கள் கற்கின்றோமா

உணர்கின்றோமா

தாயின் கருவறையில்.....


(எம்.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை -64)