அன்பு உயர்த்தும் மொழி .. ஆணவமே அழிக்கும் மொழி!
Mar 16, 2026,01:22 PM IST
- எம்.பாரதி
அன்பு உயர்த்தும் மொழி
ஆணவமே அழிக்கும் மொழி
இகழ்தல் கெடுக்கும் மொழி
ஈதலே கொடுக்கும் மொழி
உழைப்பு உயர்த்தும் மொழி
ஊழலே தாழ்த்தும் மொழி
எறும்பு உழைக்கும் மொழி
ஏளனமே சோம்பல் மொழி
ஐராவதம் புராண மொழி
ஒற்றுமையே உலகு மொழி
ஓடுதல் விலகு மொழி
ஔவை மொழியை வழி மொழி
அஃதே அறத்தின் மொழி
கல்வி கற்கும் மொழி
சங்கம் வளர்த்த மொழி
ஞானம் தரும் மொழி
தவம் செய்யும் மொழி
நயம்படப் பேசும் மொழி
பண்பைக் காக்கும் மொழி
மனிதம் போற்றும் மொழி
வான்புகழ் கொண்ட மொழி
'ழ'கரம் கொண்ட தனி மொழி
அமுதுக்கு நேர்நிகர் எம் தமிழ் மொழி!
எம் மொழிக்கு என்றும் இல்லை ஈடு மொழி
(எம்.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)