ஆசிரியர்!
Mar 11, 2026,10:39 AM IST
- எம். பாரதி
வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்
வார்த்தைகளால்
கட்டிப் போடுபவர்
அறிவு தீபத்தை ஏற்றுபவர்
பகுத்து ஆராய கற்றுத் தருபவர்
கதைகளால் பல நாடுகளை
கண் முன் கொண்டு வருபவர்
நூலகத்தை நாட தூண்டுபவர்
பாடங்களை தாண்டி மாணவச் செல்வங்களின்
பன்முகத் திறனை அடையாளம் கண்டு வெளிப்படுத்துபவர்
பாசத்தை பொழிவதில் அன்னையாகவும்
கண்டிப்பதில் தந்தையாகவும்
வாழ்க்கையில் ஏற்றிவிடும் ஏணியாகவும்
மனதில் சிம்மாசனம் இட்டு இருப்பவர்
அவரே
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்
சிற்பியுமாவார்!
(M.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை 64)