மகளிர் தின சிறப்புகள்.. பெண்களைப் போற்றிய முண்டாசுக் கவிஞனும், தெய்வப் புலவரும்

Mar 06, 2026,01:13 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்ச் எட்டாம் தேதி கொண்டாடவிற்கும் மகளிர் தினம் சிறப்புகள் எனும் தலைப்பில் நாம் இன்று  முண்டாசுக் கவிஞன் பாரதியார் தனது கவிதைகளில் பெண்மையைப் பற்றி எழுதிய சில பாடல்களை பற்றியும்,திருவள்ளுவர் பெண்களை பற்றி கூறிய முக்கிய கருத்துகளை பற்றியும் பார்ப்போம்....


உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!

உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்:,

உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும்:

உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!

ஊது கொம்புகள்,ஆடு களி கொண்டே 


'போற்றி தாய்' என்று தோள் கொட்டி  ஆடுவீர்  புகழ்ச்சி கூறு விர் காதற் கிளி கட்கே,

நூற்றிரண்டு  மலைகளைச் சாடுவோம் நுண்ணிடை பெண்ணொருத்தி பணியிலே - மகாகவி பாரதியார்.




இந்தியாவின் விடிவெள்ளியாக தோன்றிய மகாகவி சுப்பிரமணிய பாரதி விடுதலை உணர்வையும், விழிப்புணர்வையும் மக்களிடையே பரவச் செய்த அவர், பெண்களின் விடுதலைக்கும், கல்விக்கும், சமத்துவத்திற்கும் குரல் கொடுத்த முன்னோடி கவிஞரான பாரதி பெண்களைப் பற்றி நிறைய பாடல்களை எழுதியுள்ளார். "பெண் என்பவள் பேசும் தெய்வம்" என்பதை வலியுறுத்து முகமாக அன்னை காளியை ஆயிரம் இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் புதுமைப் பெண், பெண்மை விடுதலை கும்மி போன்ற பல்வேறு தலைப்புகளில் பெண்மையை போற்றியும் எழுதி உள்ளார்.


பேசும் தெய்வமாக பெண்ணை சுட்டிக்காட்டி தம் கவிதைகளில் "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று சக்தியின் உருவமாக பெண்ணை பார்க்கிறார்.


பெண் விடுதலை பற்றி அவர் எழுதிய வரிகள் இதோ..


"காரியத்தில் உறுதி வேண்டும் 

பெண் விடுதலை வேண்டும் 

பெரிய கடவுள் காக்க வேண்டும் 

மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் 

உண்மை நின்றிட வேண்டும் ".


ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பதை உணர்த்தும் பாடல் வரிகள் இதோ..


மாதர் தம்மை இழிவு செய்யும் 

மடமையை கொளுத்துவோம் :

வையவாழ்வு  தன்னில்  எந்த  

வகையினும்  நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி                    

ஆண்களோடு பெண்களும் 

சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே "

எத்துணை அருமையாக பெண்களைப் பற்றி அன்றே எழுதியுள்ளார்  பாருங்கள்...

 

இப்பொழுது திருவள்ளுவர் பெண்களைப் பற்றி  கூறிய முக்கிய கருத்துக்கள் பார்ப்போமா.. 


தெய்வப்புலவர்  திருவள்ளுவர்  பெண்களை இல்லறத்தின் இரு கண்களாகவும், நற்பண்புகள்,கற்பு நெறி மற்றும் குடும்ப மேலாண்மை கொண்டவர்களாகவும் போற்றுகிறார்.  "தெய்வம் தொழாள் கொழுநன்  தொழுதெழுவாள்  பெய்யெனப் பெய்யும் மழை" என்னும்  திருக்குறளில் பெண்கள் தம் கணவனை தன்னைக் காத்துக் குடும்பத்தைக் காத்து சோர்விலாத பெண்ணாக இருத்தலை குறிப்பிடுகின்றார். "பெண்வழிச் சே றல்"  என்ற அதிகாரத்தில் மனைவி மீது அன்பு செலுத்துவதையும்,அதே சமயம் கணவனை மதித்து நடக்கும் பண்பையும் வலியுறுத்துகிறார்.


திருவள்ளுவர் பெண்கள் பற்றி கூறிய முக்கிய கருத்துக்கள் :


கற்பு நெறி :


கணவனை தெய்வமாக கருதி வணங்கும் பெண் (தெய்வம் தொழாள்) மழை பெய்யச் சொல்வாள், அது பெய்யும் என்று வள்ளுவர் பெண்ணின் கற்புத்திறனை உயர்த்திப் பேசுகிறார்.


இல்லற பண்பு:




புகழ்பெற்று விளங்கும் இல்லறத்திற்கு நற்பண்புகளை உடைய பெண்ணே அடிப்படை என்பதை கூறுகிறார்.


குடும்ப மேலாண்மை:


வரவுக்குள் செலவு செய்து,குடும்பத்தை முறைப்படி நடத்தும் பெண்ணே சிறந்த மனைவி என்று கூறுகிறார்.  குடும்பத்தின் பெருமை: ஒரு குடும்பத்தின் பெருமை குடும்ப பெண்ணின் பண்பை  பொறுத்தே அமையும்.  


பெண்ணின் அருமை பெருமைகளை பாரதியாரும், திருவள்ளுவரும் எழுதியதை சில தகவல்களாக அறிந்து கொண்டோம். மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தூய்மையான காற்று!

news

துபாயில் ஏவுகணை தாக்குதல் ...மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்

news

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ரிசல்ட் ...இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை பெண் சாதனை

news

மறுமலர்ச்சி… கற்றுக்கொள்ளும் இயந்திரங்கள்.. தோற்குமா மனிதசக்தி (5)

news

வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

news

கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி

news

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதியா? .. என்ன சந்தேகமா இருக்கா!!

news

ஆள் பாதி ஆடை பாதியா?.. இன்று என்ன நாள் தெரியுமா மக்களே!

news

புரட்சிப் புயலாய் எழுந்திடு பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்