M Bharathi Poem: காற்று
Apr 20, 2026,12:15 PM IST
- மு. பாரதி
கண்ணுக்கு தெரியாமல்
அமைதியாய்
புவியை சுவாசிக்க
வைக்கும்
வளியே
மரங்கள் சோலையானால்
பஞ்சமில்லை
வளிக்கு
மரங்களின்றி
பாலைவனமானால்
உலகமே
செல்லும்
வலிக்கு
ஒவ்வொரு
மனிதனும்
விரும்புவது
நீண்ட ஆயுளை
நீண்ட
ஆயுளுக்கு
தேவையும்
வளியே
பெருந்தொற்று
காலத்தில்
வளியை
தேடித்தேடி
அலைந்தோம்
ஆயினும்
மரக்கன்றுகள்
நட
மறக்கிறோம்
எதிர்கால சந்ததியினர்
பணம் கொடுத்து முதுகில்
வளியை சுமக்கின்ற
நிலைக்கு
தள்ளாமல்
நம்மைப் போலவே
சுதந்திரமாக
சுவாசிக்க
எங்கெங்கிலும்
மரக்கன்றுகளை
நடுவோம்
புவியை
பசுமையாக்குவோம்
வலியின்றி
வளியைப் பெற
வழி வகுப்போம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை 64)