புன்னகை ப் பூவே
- பாவலர் மாயோன் மங்கை
என்னவளுக்காக
என்ன கொடுக்கலாம்
எதைக் கொடுக்கலாம்
எண்ணியது உள்ளம்
அவள் சொல்லிவிடுவாளோ இப்படி
நீ உன்னையே கொடுத்தாயடா
பிறகெதற்கு வேறொன்றென்று
சிந்தித்தேன்
சிறிது சிலாகித்தேன்
எழுந்தேன்
பூந்தோட்டம் நோக்கிச் சென்றேன்
பூத்த பூக்கள் எல்லாவற்றிலும் அவள்
முகமே புன்னகையுடன்
வாவென அழைத்தது
யோசித்தேன்
மலர்களைக் கொய்யப்போன என்னை
நானே கோபம் கொண்டேன்
ஒவ்வொரு மலரிலும்
இதழ் பதித்தேன் அதனுடைய. வாசத்தில்
சுவாசமானேன்
வழியில் ஒரு பூக்கடையில்
கொத்துமலரக் காட்சி தந்தது
கொய்து கொத்தாக்கியதை
ஒன்று வாங்கினேன்
அவளும் நானும் சந்திக்கும்
இடத்தில் காத்திருருந்தேன்
பனி மலராக
இனிய புன்னகையோடு
மலர் ஆடி வந்தது
உடனே பூச்சென்டைப் பின்னாலே
மறைத்தேன்
ஏனென்றால் இவளிடம்
இல்லாத ஒன்றைத்தரவே
எண்ணினேன்
இவளிடம்
எல்லாமே எழிலாக ஏற்றமாக
அவளிடம் உள்ள போது
உண்மையில்
என் அரவணைப்பே
இப்போது அவளிடம்
இல்லை
கொடி யென அவள்
சாய்ந்தாள்
மாரோடு ஏந்திக் கொண்டேன்