மங்கையிவள் மனசு மச்சான் பேரே சொல்லும்!

Aug 11, 2026,10:22 AM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


சின்னப்பொண்ணு வாடி

சேர்ந்திடுவோம் ஜோடி


கன்னத்திலே நீயும் 

முத்தம் ஒன்னு தாடி


வண்ண வண்ண சேலை 

வாங்கி வந்து தாரேன்


உடுத்திக் கிட்டு நீயும் 

ஒய்யாரமாய் வாடி


ஒதடு ரொம்ப செகப்பு 

உதிர்க்குமடி சிரிப்பு


கள்ளம் கபடம் இல்லேயடி 

கண்மணியே உனக்கு




கண் போல பாத்துக்கணும் 

என்னுடைய பொறுப்பு


மாமன் பெத்த மகளே 

மலரும் ரோஜா இதழே


அலை போல 

தவழ்ந்து வந்து 

அள்ளிக் கொள்ளும் முகிலே


ஆழ்கடலில் முத்தே 

ஆலமர வித்தே


அவதாரம் பத்தே 

அடியேனின் சொத்தே


மடைதிறந்த வெள்ளம் 

மகிழ்ச்சியோடு துள்ளும்


மங்கையிவள் மனசு 

மச்சான் பேரே சொல்லும்


கங்கை போல 

பாய்ந்து வந்து 

கண்ணே உந்தன் 

உள்ளம் 


கவர்ந்து கொண்டு 

செல்லுமடி காரிகை யின் இல்லம்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்