Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

Oct 05, 2026,03:55 PM IST

- க. யாஸ்மின் சிராஜுதீன்


ஹாய் பிரண்ட்ஸ்.. மாலை வந்து விட்டது. இன்றைக்கு ஏதாவது இனிப்பு செய்து special ஆக இந்த  மாலைப் பொழுதைக் கொண்டாடலாமா..


வாங்க சேமியா பால்பாயாசம் செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு மற்றும்  விருந்தினர்களுக்கு surprise  கொடுக்கலாம்.. 


முதல்ல தேவையான பொருட்களைப்  பார்ப்போம்  


1. சேமியா

2.நெய்

3.முந்திரி

4.திராட்சை

5.பாதாம் பருப்பு 

6.பால்

7.தண்ணீர் 

8.லவங்கம்

9.பட்டை

10.ஏலக்காய் 

11. மில்க்மெய்ட்

12. சர்க்கரை 


அடுத்து என்ன பண்ணனும் தெரியுமா..




Stove ல் பாத்திரம் வைத்து சூடேறியதும்  நெய் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி சேமியாவை பொன்னிறமாக வதக்க வேண்டும். இதை தட்டுக்கு மாற்றி விட்டு மீண்டும் சிறிது நெய் விட்டு  முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். 


சிறிது நெய்விட்டு ஏலக்காய், பட்டை,லவங்கம் போட்டு தாளித்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும், (எந்த அளவு தளர்வாக வேண்டுமோ அதற்கேற்ப)  கொதிக்க விடவும். இன்னோரு பக்க அடுப்பிலோ அல்லது முன்னாடியோ  பால் கொதிக்க வைத்து  இறக்கி வைத்துக்கொள்ளவும்.


தண்ணீர் கொதித்தபின் வறுத்த சேமியாவை  சேர்க்கவும் . சேமியா வெந்த பின் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். பின்னர் காய்ச்சிய பாலை சேர்த்து ஒரு கொதிகொதிக்க விடவும்.. 


விருப்பப்ட்டால் milkmaid சிறிது சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் இருந்து இறக்கி வைத்து  பின்னர் ஏலக்காய் இரண்டு எடுத்து நசுக்கி தூவவும், பின்னர் வறுத்து வைத்துள்ள நட்ஸ் அனைத்தும் பாயாசம் மேல் தூவி அலங்கரிக்கவும்.  

இப்போ சுவையான மணமான  delicious  பால் பாயாசம் ரெடி


வீட்டில் உள்ள அனைவருக்கும் சூடாக பரிமாறவும் அன்பாக கலந்துரையாடவும்...


இப்ப பாருங்க பாராட்டு பரிசு எல்லாம் உங்களுக்குதாங்க.. என்ன நண்பர்களே பால்பாயாசம் செய்து கலக்கிடலாமா...


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பசி ஆற்றும் இறை

news

நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

மனிதன் எப்போது மாமனிதன் ஆகிறான்?

அதிகம் பார்க்கும் செய்திகள்