சமையல் With ஸ்வர்ணா: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு ஏற்ற சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்!

Oct 05, 2026,11:57 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


இரண்டு சட்னி இரண்டு ஃபுட் For snacks & dinner -  Two chutney, two food.. மூன்று இலை பச்சை சட்னி, சிகப்பு சட்னி, காய்கறிகள் எல்லாம் வைத்து டீ டைமில்  தட்டு வடை செட் சாப்பிட்டால் அடடே.. அடடே.. என்ன ருசி... என்ன ருசி.... அருமையாக, அதீத சுவையாக நாக்கு  சப்பு கொட்டும் அளவிற்கு இருக்கும். நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது. குழந்தைகள் இன்னும் வேண்டும் இன்னொன்று வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு அப்படி இருக்கும் இந்த தட்டை செட்.


வாருங்கள் தட்டு வடை செட்  எப்படி? செய்யலாம் என்று பார்ப்போம்...


ஸ்கூல் விட்டு வரும் பள்ளி குழந்தைகளுக்கு, காய்கறிகள் சாப்பிட தயங்கும் குழந்தைகளுக்கு, அலுவலகத்தில் இருந்து வருபவர்களுக்கு, மற்றும் அனைவருக்கும் பிடித்த மாங்கனி நகர் சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்.


இந்த சட்னி வகைகளை செய்து வைத்துக் கொண்டால் ஈவினிங் ஸ்நாக்ஸ் மட்டும் அல்லாமல் இரவில் டின்னருக்கும் இட்லி தோசைக்கு ஏற்றதாக குடும்பத் தலைவிகளுக்கு, அலுவலகத்தில் இருந்து வேலை முடித்து வரும் பெண்களுக்கும் வேலை மிச்சம். ஒரு பாக்கெட் தட்டு வடை வாங்கிட்டு வந்தால் போதும். சட்டென்று  செய்துவிடலாம்.


வாருங்கள்ஃபிரண்ட்ஸ்  கிச்சனுக்குள் போகலாம். நம்ம ஸ்டைல்ல இரண்டு சட்னி, இரண்டு ஃபுட் - ஸ்நாக்ஸுக்கும், டின்னருக்கும் ஏற்றவை செய்யலாமா...


தட்டுவடை செட் செய்ய தேவையானவை:




1. கடையில் விற்கும் தட்டு வடை  - ஒரு பாக்கெட்.( தேவைக்கு ஏற்ப).

2. புதினா  - ஒரு கட்டு.

3. மல்லித்தழை  -ஒரு கட்டு .

4. கருவேப்பிலை 20 இலைகள்.

5. பச்சை மிளகாய்  -2 (காரத்திற்கு ஏற்ப).

6. சீரகம்  - 1/4 ஸ்பூன்.

7. பூண்டு  -  6 பல்.

8. பெரிய நெல்லிக்காய் கட் செய்தது அரை ஸ்பூன்.

9. உப்பு தேவைக்கு ஏற்ப.

10. பொட்டுக்கடலை பொடி   -  ஸ்பூன்.

 

மூன்று இலை பச்சை சட்னி செய்முறை :


1. புதினா,மல்லித்தழை, கருவேப்பிலை   - சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும்.

2. நன்றாக தண்ணீர் வடித்து மிக்ஸி ஜாரில் போடவும்.

3. சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை பொடி,பெரிய (துருவியது ) நெல்லிக்காய்,உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்கவும். 


மூன்று இலை பச்சை சட்னி ரெடி. ஒரு பவுலில் வைத்துக் கொள்ளவும். அடுத்து டேஸ்டியான சிகப்பு சட்னி செய்யலாமா? வாருங்கள் பார்க்கலாம்...


சிகப்பு சட்னி:

                          

1.  தக்காளி  -6. 

 2.  வரமிளகாய், காஷ்மீரி மிளகாய் - தலா 2 சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

3. பூண்டு   -6 பல்.

4. பெரிய வெங்காயம் -1.

5. புளி   - சிறிதளவு. (தேவைக்கு)

6. சமையல் எண்ணெய்- 2 ஸ்பூன்.

7. பெரிய நெல்லிக்காய் துருவியது கால் ஸ்பூன்.

8. உப்பு தேவைக்கு ஏற்ப.

9. சீரகம்   - 1/2 ஸ்பூன்.

10. பொட்டுக்கடலை பவுடர் ஒரு ஸ்பூன் 


(தேவைப்பட்டால் சிறிது வெல்லம்  சேர்த்துக் கொள்ளலாம்).


சிகப்பு சட்னி செய்முறை :


1. வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், புளி பூண்டு, நீரில் ஊற வைத்த வரமிளகாய் காஷ்மீரி மிளகாய் ( ஊறிய மிளகாய் மட்டும் ), சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

 

(குறிப்பு: இவை அனைத்தையும் வதக்காமல் அப்படியே பச்சையாக  அரைத்து விட்டு எண்ணெய் ஊற்றி தாளிப்பு கொடுத்தால் பச்சை வாசனை வராமல் இருக்கும். )


2.  நன்றாக சூடு ஆறிய பிறகு இவை அனைத்தையும் பெரிய நெல்லிக்காய் துருவல், பொட்டுக்கடலை பொடி, உப்பு   சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.


இப்பொழுது இரண்டு சட்னியும் ரெடி... அடுத்து தட்டையில் காய்கறிகள் வைக்க ரெடி பண்ணலாமா?


1. கேரட் துருவல் -ஒரு கப் 

2. பீட்ரூட் துருவல் -ஒரு கப் 

3. மாங்காய் துருவல் -1 கப் 

4. பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது .

5. பொடியாக நறுக்கிய மல்லித்தழை.


அவ்வளவுதாங்க எல்லாம் ரெடி செய்து விட்டோம் இப்பொழுது தட்டையில் ஃபில் பண்ண வேண்டியதுதான்.


ஒரு தட்டையில் பச்சை சட்னி வைக்கவும்.அதன் மேல் சிறிது கேரட் துருவல், பீட்ரூட் துருவல், மாங்காய் துருவல்,பெரிய வெங்காயம், மல்லித்தழை வைக்கவும்.

       

இன்னொரு தட்டையில் சிகப்பு சட்னி சிறிது தடவவும். காய்கறிகள் மீது இந்த தட்டையை வைத்தால் சுவையான.. பலே.. பலே.. ருசியான ஹெல்த்தியான தட்டுவடை செட் சாப்பிடலாம் வாங்க  .


இது வெறும் ஸ்நாக்ஸ் மட்டுமில்லீங்க... பச்சை காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் ஹெல்த்தி இல்லையா? குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களையே தட்டையில் காய்கறிகள் வைக்கச் சொல்லுங்கள். மிகவும் ஆர்வமாக செய்வார்கள்.


சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட் வெறும் ஸ்னாக்ஸ் மட்டுமில்லீங்க ஹெல்தியும் கூட என்னென்ன? பயன்கள் இருக்கு தெரியுமா? 


பயன்கள்

  

கேரட் :


கேரட்டில் - பீட்டா கரோட்டின்,வைட்டமின் ஏ, சி,கே 1 ,நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. இன்றைய கால கட்டங்களில் குழந்தைகள் சிறு வயதிலேயே கண் கண்ணாடி அணியும் நிலைமை உள்ளது. எனவே அவர்களுக்கு கண் பார்வை திறன் மேம்படும்.செரிமானம், இதயநலம், சரும பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.


பீட்ரூட் 




பீட்ரூட்டில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது.


உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகவும், ரத்தசோகை நீக்கவும், இதில் உள்ள  நைட் ரேட்  ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

 

இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க உதவும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தேவையான ஆற்றலை தரும். சோர்வை போக்கும். சருமம் பளபளப்பாக இருக்கும்.


பெரிய நெல்லிக்காய் 


இதில் பெரிய நெல்லிக்காய் துருவல் சேர்த்து இருப்பதால் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. சருமத்தை பாதுகாக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பேணுகிறது. 


வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் உள்ளதால் கண் பார்வை மேம்படுகிறது. நீரிழிவு நோயாளிகளும் அளவுடன் உட்கொள்ளலாம்.


என்ன.. பிரண்ட்ஸ் இந்த சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட் வெறும் ருசிக்காக மட்டுமல்ல ஹெல்தியான உணவும் கூட .

அம்மா சமைக்கும் உணவில் அன்பும் அக்கறையும் இருக்கும் இல்லையா?.. எங்க போறீங்க  ஃபிரண்ட்ஸ்  ஸ்நாக்ஸ் ரெடி பண்ண போறீங்களா? செய்து பாருங்கள். மீதமுள்ள சட்னி இரவு டின்னருக்கும் பயன்படுகிறது.. இல்லையா?.. ஸோ அதனால்தான் இது... இரண்டு சட்னி இரண்டு  ஃபுட்!


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்