- சு.தா.அறிவழகன்
“திரையரங்கின் இருட்டில் பிரசவிக்கும் நட்சத்திரங்கள், நாளை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் வெளிச்சத்தில் பிரகாசிப்பார்கள்” என்பது தமிழக அரசியல் வரலாறு கற்றுக்கொடுத்த நெடுங்கால பாடம். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்குக் சினிமாவும் அரசியலும் பிணைந்து கிடப்பது தமிழகத்தில் மட்டும்தான்.
தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே பாக்யராஜ், டி.ராஜேந்தர், உலகநாயகன் கமல்ஹாசன், விஜயகாந்த் என எண்ணற்ற நட்சத்திரங்கள் மக்கள் மன்றத்திற்கு வந்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் என்ற விஸ்வரூப ஆளுமை அமைத்துத் தந்த அரியணையில் அமரும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்த்துவிடவில்லை.
எம்.ஜி.ஆர் அடைந்த மாபெரும் வெற்றியும், அவருக்குப் பின் ஜெயலலிதா தக்கவைத்துக்கொண்ட மக்கள் செல்வாக்கும் தமிழ்நாட்டின் அரசியலில் நடிகர்களுக்கான கனவை நிரந்தரமாக்கியது. அதற்குப் பிறகு, கேப்டன் விஜயகாந்த் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்து மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
தற்போது அந்த வரிசையில், திரையுலக உச்சத்தில் இருக்கும்போதே அதைத் துறந்து முழுநேர அரசியலில் களம் கண்டுள்ள விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' மூலம் மிகப்பெரிய அரசியல் அலைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளார். எம்ஜிஆருக்குப் பின்னர் எடுத்த எடுப்பிலேயே அரியணை ஏறி சாதித்துள்ளார்.

விஜய்யின் இந்த அரசியல் நகர்வு, தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நடிகர்களிடையேயும் ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் புற்றீசல் போல ஆர்வத்துடன் கிளம்ப ஆரம்பித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் மீது சமீப காலமாக பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது ரசிகர் மன்றங்களைத் தொகுதி வாரியாக சீரமைப்பதிலும், ரசிகர்கள் மூலம் சமூக நலப்பணிகளை முடுக்கிவிடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். "ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் வேண்டும்; மன்றங்கள் வெறும் கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல, சமூகப் பணிகளுக்குப் பயன்பட வேண்டும்" என அவர் பேசியிருப்பது அரசியல் கணக்குகளுக்குப் புதிய தீனி போட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்து தற்போது தனுஷின் போட்டியாளராக கருதப்படும் சிவகார்த்திகேயனும் அரசியல் ஆர்வத்துடன் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'மக்களின் செல்லப் பிள்ளை' என்ற பிம்பத்தோடு வலம் வரும் சிவகார்த்திகேயன், நேற்று நடத்திய நிர்வாகிகள் கூட்டம் அனைவரையும் வியப்பில் விழி விரிய வைத்துள்து.
பிரமாண்டமான முறையில் அரசியல் கட்சிக் கூட்டம் போல பேனர், கட் அவுட் சகிதம் நடந்த இந்த கூட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒருவேளை சிவகாரத்திகேயனும் வரப் போறாரா என்ற கேள்வியை கிளப்பியுள்ளது.
தனுஷும் சரி, சிவகார்த்திகேயனும் சரி, இருவருமே அதிகாரப்பூர்வமாக எந்த அரசியல் அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், "அடுத்த விஜய் யார்?" என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்களிடமும் அரசியல் பார்வையாளர்களிடமும் வேகமாக ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
திரை உலகில் ஈர்க்கும் 'ஸ்டார் வேல்யூ' (Star Value) மட்டுமே ஒருவரை முதலமைச்சராகவோ அல்லது சிறந்த தலைவராகவோ மாற்றிவிடாது. வெறும் ரசிகர் பட்டாளம் வாக்கு வங்கியாக மாறுவதில்லை. அதற்குத் தெளிவான கொள்கையும், மக்கள் சார்ந்த களப்போராட்டங்களும் அவசியம். ஆனால் விஜய் ரசிகர்கள் இதில் மாறுபட்டவர்களாக உள்ளனர்.
இன்றைய தலைமுறை வாக்காளர்கள் வெறும் திரைப் பிம்பத்தை பார்த்து மட்டும் வாக்களிப்பதில்லை. வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூக நீதி மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். குறிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதைக் கொடுப்பார் என்பதால்தான் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.
சினிமா என்பது தமிழக மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது அவர்களின் அன்றாட வாழ்வியலோடு கலந்த ஒரு உணர்வு. அதனால்தான், திரையில் பார்க்கும் கதாநாயகனைத் தங்கள் வாழ்வை மாற்றும் தலைவனாகப் பார்க்கும் போக்கு இங்குத் தொடர்கிறது.
தனுஷோ அல்லது சிவகார்த்திகேயனோ... நாளை அரசியல் களம் காண்பதும் காணாததும் அவர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால், தமிழக அரசியல் எனும் சதுரங்க வேட்டையில், “மக்களின் ஆதரவு எனும் ஒற்றை வெளிச்சம் மட்டுமே ஒரு நடிகரை தலைவனாக மாற்றும்” என்பதே வெள்ளியிடை மலை.
அன்பின் மொழி
இறுதி அஞ்சலி!
NEVER and EVER
Poetic raindrops trickling from Viji Venkatesh’s ink!
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
{{comments.comment}}