குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

Oct 05, 2026,05:15 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


ஒவ்வொரு ஊரிலும் ஒரு ஸ்பெஷல் கிடைக்கும். நான் எந்த ஊரில் எது ஸ்பெஷலோ அதுவும் எந்த கடையில் பெஸ்ட் என்று நாலுபேர் கிட்ட விசாரித்து அதை சுவைத்து பார்க்க பிடிக்கும்.


நாகர்கோவிலுக்கும் சில ஸ்பெஷல்கள் உள்ளன. அதாவது பழ பஜ்ஜியும், குலுக்கி சர்பத் மற்றும் ஆப்பம் புட்டு மற்றும் அடைபாயாசம் இவைதான் நாகர்கோவின் விசேஷங்கள். சாப்பிட்டுப் பார்த்தாலே வேற லெவல் சந்தோஷம்தான்.


குலுக்கி சர்பத் என்பது எலுமிச்சை சர்பத், கொஞ்சம் அரைத்த சீ,னி வேறு எதாவது பழச்சாறு டம்ளரில் நீர் கலந்து அதன் மேல் ஒரு பாட்டில் போல வைத்து பலமுறை நுரை பொங்கி குலுக்கி கொடுத்தால் ஆஹா அற்புத சுவை தான் போங்க.


அந்தப் பாட்டிலை வைத்து அவர்கள் அடித்துத் தரும் வித்தைதான் இங்கு கூடுதல் ஸ்பெஷல் ஆகும். அதுபோல நுங்கு சியா இளநீர் சர்பத் கலந்து மிக்ஸியில் அடித்து தருவது தான் இளநீர் நுங்கு சர்பத். இதுவும் அல்டிமேட் சுவை. 




நாம் வாழ்வதே ஒரு சான் வயிற்றுக்காக. எனவே வாழும் வரை இயற்கை படைப்பு உணவுகளை சுவைத்து மகிழுங்கள். கன்னியாகுமரி பக்கம் வந்தால் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழுங்கள். போட்டில் சென்று கண்ணாடிபாலத்தில் நடந்து திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறை முக்கடல் சங்கம் ரசிக்கலாம்.


வாழ்க்கையை ரசிங்க பாஸ்.. அதை விட வேற என்ன வேலை இருக்கு சொல்லுங்க.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி.. தனிப்பெரும் கருணை!

news

இளையவன்!

news

சிந்தனைச் சிதறல்.. எல்லா நேரங்களிலும் இருந்தும், அறியவும், அனுபவிக்கவும் மறுக்கும் அதிசயச்சொல்!

news

World Teachers’ Day

news

கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர்.. அருட்பெரும் வள்ளலார்

அதிகம் பார்க்கும் செய்திகள்