நீயும் நானும்!
- மடிப்பாக்கம் பிரபாவதி
நிறைந்த மகிழ்ச்சியுடன் மணம் புரிந்தோம்
நிறைய கனவுகள் கண்டு வந்தோம்
நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தோம்
பிள்ளைகள் பெற்று வளர்த்தோம்
நிறைய உழைத்தோம் உடல் நலிந்தோம்
பேரன் பேத்திகள் அன்பிற்காகவும்
பிள்ளைகள் பெண்களின் வரவிற்காகவும்
எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கிறோம்
முதுமை வந்ததால் முதியோர் இல்லத்தில்!
(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Booner to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)