நான்கு முழம் நீளும் நாக்கு!

Su.tha Arivalagan
Nov 13, 2026,08:51 AM IST

- மடிப்பாக்கம் பிரபாவதி


சுண்டக் காய்ச்சிய பாலை 

துளி தயிர் சேர்த்து

பதமாய் நிலாவொளியில் புரைக்கூற்றி

அதிகாலை ஆடைமிதக்கத் தோய்ந்தத் தயிரெடுத்து

மெத்தென வடித்து ஆறவைத்த சாதத்தில்

திட்டமாய் உப்பு சேர்த்து கட்டித் தயிர் மெல்ல சேர்த்து

தளர்வாய் பிசைந்த சாதத்தில் பெருங் காயமும் 

கடுகும் கறிவேப்பிலையும் தாளித்து போட்டு





திராட்சையும் மாதுளையும் கொஞ்சமாய் கலந்து

நார்த்தங்காயும், மோர்மிளகாயும்

வேப்பிலைக் கட்டியும்

தொட்டுக் கொண்டு தொண்டைக்கு செலுத்திட

சப்புக் கொட்டி

நான்கு முழம் நீளும் நாக்கு 


(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ - பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Booner to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)