விநாயகர் துதி

Su.tha Arivalagan
Nov 20, 2026,04:01 PM IST

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்_ கோலஞ் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா..


திருவாசகம் தொடர்ச்சி....


பதிகம்__2 கீர்த்தி திருஅகவல்


(பாடல் வரி)


1 தில்லை மூதூர் ஆடிய திருவடி 

2 பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி


(விளக்கம்)


தில்லை _ (சிதம்பரம்) ஆகாயத்தலம் எல்லா பூதங்களுக்கும் இடம் கொடுப்பது ஆகாயம். ஆகாயத்தில் எல்லாம் அடங்கிவிடும். ஒளியும் வெளியுமாக ஆளக்கூடிய இடம் தில்லையாகும்.


அரு, உரு, அரு உருவம் மூன்றும் ஒரு சேர அமைந்துள்ள இடம் தில்லையாகும். தில்லையின் ரகசியம் பார்க்க முடியாதது - அதாவது கண்ணால் காண முடியாததை அரு என்போம். நடராஜப் பெருமானை பார்க்கலாம். அது உரு எனப்படும். அங்கு இருக்கக்கூடிய சிவபெருமான், மரகதலிங்கம், ரத்னலிங்கம், எனவே அது அருவுருவம் ஆகும்.


தில்லை மரங்கள் நிறைந்த அடர்த்தியான காடுகள் கொண்ட மூதூர் எனும் மிகப்பழமை யான சிதம்பரத்தில் ஊழிக் காலத்திலும் எம்பெருமானின் நடனம் தொடரும். எனவே திருவடி என்பது குருநாதரையும் கடவுளையும் குறிக்கும் தில்லை என்னும் பழமையான ஊரில் நடனமாடிய எம்பெருமான் என்று பொருள் 


பல உயிர்களில் விடாமல் திரும்பி திரும்பி உள்புகுந்து அவற்றின் மொழிகளைப் கற்றுவித்தான்


{பாடல் வரி}





3. எண். இல் பல் குணம் எழில்  பெற விளங்கி,


4. மண்ணும், விண்ணும், வானோர், உலகும் 


5. துண்ணிய கல்வி தோற்றியும் அளிக்கும்


{பாடல் விளக்கம்}


பல  உயிர்களில் விடாமல் திரும்பித் திரும்பி உயிர்களின் தன்மைக்கு ஏற்ப பல குணங்களைக் கொண்டு அழகு பெற விளங்குகிறான் என்குனத்தான் என்றும், இங்கு குணம் என்பது ஆற்றலை, குறிக்கும் இறைவனது பல்வேறு ஆற்றல்களும் அவனிடமிருந்து பிரிக்க முடியாத தன்மையாகும். இறைவனே ஆற்றல் வடிவாக உள்ளான் என்பதை குறிக்கும் .


4. மண்ணும்_ இப்பூஉலகையும் 


விண்ணும்_வாணுலகமும், வானோர்_ சூக்குமஉடம்பு உடன் வாழும் தேவர் உலகையும் எல்லை காண முடியாததாகிய இப்ப பிரபஞ்சத்தில் மண், விண், வானோர் ஆகியவற்றுள் வாழும் எண்ணிறைந்த உயிர்களையும் படைத்த பரம்பொருள். அவை வளர்ச்சி அடைவதற்கும் கூடி வாழ்வதற்கும் ஏதுவாகிய சொல், பொருள், என்றவாறு பிரபஞ்சத்தை தோற்றுவித்து பிரளய காலத்தில் உயிர்கள் அழியும் பொழுது அவ் உயிர்களிடையே இருந்த துண்ணிய கல்வி அழியுமாறு செய்கிறான் இறைவன். 


எனவே இறைவன் பல்வேறு உலகங்கள் பல்வேறு காலங்கள் பல்வேறு உயிர்கள் ஆகிய அனைத்தையும் படைத்தும், காத்தும் அழிக்கின்ற பரம்பொருள், மிகப்பெரிய பேராற்றல் ஆக எங்கும் எப்பொழுதும் என்றும் நிறைந்துள்ளது என்பதை குறிக்கும்.


{பாடல் வரி}


6. என்னுடை இருளை ஏறத் துரந்தும் 


7. அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்


8. குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்,


{விளக்கம்}


இங்கு இருள் என்பது மனதின் உள்ளே மயங்கி கிடக்கும் ஆணவம் என்ற மலமாகும், இவற்றை நீக்க வேண்டுமானால் நாம் சரியை_ அதாவது திருக்கோயில்களில் செய்யும் தொண்டு,கிரியை_ நம் மனதால் நம்மிடம் உள்ள லிங்க திருமேனிக்கோ கோவிலுக்கு சென்று அபிஷேகம் ஆராதனை செய்வதுஆகும், யோகம்_ யோகம் என்பது யோக நிஷ்டையில் இருந்து தவ வாழ்க்கை வாழ்வது,ஞானம் இறைவனின் அருள் இவற்றை முறையே பின்பற்ற பல்லாண்டுகள் வழிபட வேண்டும் இவ்வாறு செய்தாலும் ஆணவ இருள் முற்றிலுமாக நீங்குவது இல்லை 


பல்லுயிர் எல்லாம் படைத்து  அவ் உயிரில் உறையும் இறைவன் கருணை வைத்தால் ஒரே வினாடியில் இருளை முழுவதும் நீக்க முடியும், இங்கு  மானிக்கவாசகருக்கு மட்டும் ஒரே பிறப்பில் அவ்இருளைத் துரக்கின்ற வாய்ப்பு கிட்டியதோ என்று நாம் எண்ணும் பொழுது அடுத்த வரியிலேயே குறிப்பிடுகிறார் "எல்லா அடியார் உள்ளத்திலும் இறைவன் குடியாக உள்ளான் "என்று "அடியார் உள்ளத்து அன்பு மீது உறக்" என்று நாம் ஐயத்தையும் போக்குகின்றார் அடியார் என்றால் ஒரு திருநீரும் அக்கமணியும் அணிந்தவர்கள் அனைவருமே அடிகளார் தான் ஆனால் இவை மட்டும் பற்றாது  அன்பு அதிகம்நிறைந்த அடியார் உள்ளத்திலும் இருக்கிறார் அன்பின் காரணமாக அவர்கள் உள்ளத்தை குடியாக கொண்டு இருக்கின்றார் என்பதை குறிக்கின்றது இந்த இடத்தில்.


{பாடல் வரி}


9. மன்னும் மாமலை மயேந்திரம்_ அதனில்,

10. சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்,


{விளக்கம்}


என்றும் நிலைத்து நிற்கும் மகேந்திர மலையில் ஆகமங்களை தோற்றுவித்து அருளிய எம் பெருமானே,


 திருச்சிற்றம்பலம்


(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)