மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அவளின் (ல்) அவன்! (16)
- ரதிதேவி
ரதி அம்மாவிடம் கெஞ்சி கேட்டாள். சொல்லுமா அவன் என்ன சொன்னான்.
இல்ல ரதி... எப்போதும் போல தான் மிரட்டினான். வேற ஒன்னுமில்லை.
அம்மா கூறியதும்.. கொஞ்சம் நிம்மதியாக அப்படியே தூங்கி விட்டாள்...
மதனுக்கோ ரதி இன்னும் வீட்டுக்கு போகலையா.. மெஸேஜ் அனுப்பல..என்னாச்சோ என்று பதறினான்.
அவனே அவளுக்கு மெஸேஜ் அனுப்பினான்...ரிப்ளை இல்லை...
மதனால் பொறுக்க முடியாமல் போன் பண்ணினான்..
போன் எடுக்கவில்லை.. மீண்டும் போன் பண்ணினான்..
அவளுடைய அம்மா எடுத்து
ஹலோ .யாரு..
மதன் கொஞ்சம் தயங்கி கொண்டே..
மேம் இருக்காங்களா ....
தூங்குறாங்க... அப்புறம் போன் பண்ணுங்க என்று சொல்லி வைத்து விட்டார்.....
மதனின் மனம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் கேட்கவில்லை
உள் மனம்......
தூங்கி எழுந்து போனைப்பார்த்த ரதி .
ஐயோ .. மதன் மெஸேஜ் பண்ணியிருக்கிறார் என்று ரிப்ளை அனுப்பினாள்..
சாரி . மதன்.. கொஞ்சம் ஸ்லீப்...
ஒகே .ரதி.. ஆர் யு ஒகே நவ்...
ஒகே ..ரதி ..
பாய் மதன்...
மறுநாள் பொழுது விடிநத்தும் விடியாததும் அவசரமாக கிளம்பினாள் ...
ரதி .. ஏன்.இந்த அவசரம்..
இல்ல மா ... இன்னிக்கு சீக்கிரமா போனும்....
சரிமா ..சாப்பிடு ..
இல்ல.. வேண்டாம் மா ..
ரதி ...நீ வேறேங்கேயும் சாப்பிட மாட்டாய் .. சாப்பிட்டு கிளம்பு....வா ..அதட்டலாக
அம்மாவின் அன்பு கட்டளைக்கு அடிபணிந்து
ரெண்டு தோசையை வேகவேகமாக சாப்பிட்டு மதிய உணவை எடுத்துக் கொண்டு கிளம்பிட்டாள் ...
வீட்டில் இருந்து கொஞ்சம் தூரம் நடந்து ஆட்டோவில் போகனும்...
நடந்து போய் கொண்டே இருக்கும் போது..ஒரு பெண் அவளைப் பின்தொடர்ந்து வருவது போல் தெரிந்தது .... இருந்தாலும் கண்டுக்காம
எதிரே வந்த ஆட்டோவில் ஏறினாள்....
அந்த பெண்ணும் ஓர் ஆட்டோவில் ஏறி பின் தொடர்வதைக் கவனித்தாள் ரதி....
யாரு அந்த பெண். இதற்கு முன் பார்த்தது இல்லையே .... யோசித்து கொண்டே இருக்கும் போது ஆபீஸ் வந்ததும் ரதி இறங்க .. அந்த பெண்ணும் இறங்கினாள் ...
ரதி ஆபீஸ் படியேற
மேம்...
குரல் கேட்டு திரும்பினாள்
மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்....
ரதி .. ஏன் இவள் நம்மிடம் பேசணும்.. யார் இவள்..என்ன வேண்டும் என்று ஓர் நிமிடம் நின்றாள்..
(தொடரும்)