நான் அவனை மன்னிச்சுட்டேன்... மனிதம் மலர்கையில் பகுதி -8

Su.tha Arivalagan
Apr 01, 2026,12:04 PM IST

- தி. மீரா


அந்த பழைய கடிதத்தை மீனா மெதுவாக திறந்தாள்.

மஞ்சள் நிறத்தில் மங்கிய எழுத்துகள்…

“அப்பா,

நான் கோபத்தில் போயிட்டேன்.


ஆனா உங்களை வெறுத்து இல்ல.

நான் என் வாழ்க்கையை நான் நிரூபிக்கணும் என்று நினைச்சேன்…”

கடிதத்தில் ஒரு முகவரி இருந்தது.


ஆனால் அது பல வருடங்கள் பழையது.

மீனா தாத்தாவை பார்த்தாள்.

“தாத்தா… இங்க ஒரு முகவரி இருக்கு.”

தாத்தா அமைதியாக சிரித்தார்.


“அது பழையது பொண்ணு… அவன் இப்போ எங்க இருக்கான்னு தெரியாது.”

“நாம முயற்சி பண்ணலாமே?”

தாத்தா சில நொடிகள் அமைதியாக இருந்தார்.




“நான் அவனை மன்னிச்சுட்டேன்.

ஆனா அவன் என்னை மன்னிச்சிருக்கான்னு தெரியல.”

அடுத்த சில நாட்களில், பள்ளி முடிந்ததும் மீனா நூலகத்துக்கு போய்,

பழைய தொலைபேசி அடைவு, இணைய வசதி—எல்லாம் பயன்படுத்தி தேட ஆரம்பித்தாள்.


(அவள் சின்னவள் தான்… ஆனா மனசு பெரியது.)

ஒருநாள், அந்த முகவரியுடன் சேர்ந்த ஒரு பெயர் கிடைத்தது.


அவர் இப்போது ஒரு சமூக சேவை அமைப்பை நடத்தி வந்தார்.

மீனா அதிர்ச்சியடைந்தாள்.

“தாத்தா ஒரு ஆசிரியர்…

மகன் இப்போ சமூக சேவை செய்றாரா?”


அடுத்த ஞாயிறு, தாத்தாவிடம் சொல்லாமல்,

அந்த அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்றாள்.

அங்கு இருந்த ஒரு நடுத்தர வயது மனிதர்,

மீனாவின் குரலை கேட்டு வெளியே வந்தார்.

“யாரை பார்க்கணும்?”


“ராமசாமி என்பவரின் மகனை…”

அந்த மனிதரின் முகம் உறைந்தது.

“நான் தான்…”

மீனா மெதுவாக சொன்னாள்:

“உங்க அப்பா உங்களை இன்னும் காத்திருக்கிறார்.”

அந்த மனிதரின் கண்களில் கண்ணீர் நிரம்பியது”


“நான் தினமும் வரணும்னு நினைக்கிறேன்…

ஆனா அவங்க என்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம்…”

மீனா சிரித்தாள்.

“அவர் தினமும் உங்களை மன்னிச்சுட்டேன் என்று சொல்லிக்கிட்டே இருக்கிறார்.”

அடுத்த நாள்…

மருத்துவமனை கதவு திறந்தது.


தாத்தா திரும்பி பார்த்தார்.

அவரது முன் நின்ற மனிதனை பார்த்ததும்,

காலம் நிற்கும் போல இருந்தது.

“அப்பா…”

அந்த ஒரு வார்த்தை—

பல வருட பிரிவை கரைத்தது.


மீனா அமைதியாக வெளியே நின்றாள்.

அவள் உள்ளத்தில் ஒரு எண்ணம்

மனிதம் மலர்கையில்,

பிரிவுகளும் கூட பூக்களாக மாறும்


மனிதம் சிறிதளவு இருந்தாலும் தொடர் சங்கிலியாகச் செல்லும் பொழுதும் தொற்று நோய் போல் தொற்றிக் கொண்டாலும் மிகப் பெரிய சமுதாய மாற்றத்தை மறுமலர்ச்சியை நிச்சயமாக கொண்டு வரும். இந்தத் தொடர்கதை

மனிதர்களை இணைக்கும் பாலமாக இருந்தது.மனிதம் மலரும் என்ற‌ நம்பிக்கையில் சமூகத்தில் நான் இங்கே இக்கதையை நிறைவு செய்கிறேன்.


(முற்றும்)


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)