ராமசாமி தாத்தாவின் கடந்த கால ரகசியம்…
மருத்துவமனை அறையில் மாலை ஒளி சாளரத்தால் உள்ளே விழுந்தது.
மீனா அமைதியாக தாத்தாவின் படுக்கையருகில் அமர்ந்திருந்தாள். “தாத்தா… நீங்க ஏன் எப்போதும் தனியா இருக்கிறீங்க?”
அந்த சின்ன கேள்வி, பெரிய நினைவுகளை கிளறியது.
தாத்தா மெதுவாக பேச தொடங்கினார். “எனக்கும் ஒரு குடும்பம் இருந்தது பொண்ணு… ஒரு மகன்… ஒரு மகள்…”
மீனா ஆச்சரியமாக பார்த்தாள்.
“நான் ஒரு பள்ளி ஆசிரியர். என் வாழ்க்கை முழுக்க குழந்தைகளுக்காகவே இருந்தேன். ஆனா என் சொந்த பிள்ளைகளுக்கு நான் நேரம் கொடுக்கலை.
‘பின்னாடி பார்க்கலாம்’ன்னு நினைச்சேன்…” அவரது குரல் சற்றே நடுங்கியது.

"என் மகன் ஒரு நாள் கோபத்தில் வீட்டை விட்டு போனான்.
அவனை தேடினேன்… ஆனா கிடைக்கலை. அதற்குப் பிறகு என் மனைவியும் உடம்பு சரியில்லாமல்… என்னை விட்டு போயிட்டா.”
அறையில் ஒரு கனமான அமைதி.
“அந்த நாள் முதல் தான் புரிஞ்சது மனிதன் பெரிய சாதனை பண்ணினாலும், அவன் அருகிலுள்ள மனசை இழந்தா அது வெறுமைதான்.”
மீனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“தாத்தா… உங்க மகன் திரும்பி வரலையா?”
தாத்தா மெதுவாக தலையசைத்தார்.
“ஒரு கடிதம் மட்டும் வந்தது… பல வருடங்களுக்கு முன்னாடி. அவன் வெளிநாட்டுக்கு போயிருப்பான்னு தெரியும்.
ஆனா இப்போ எங்கேன்னு தெரியாது.”
மீனா சற்று யோசித்தாள். அவளின் மனதில் ஒரு தீப்பொறி.
“தாத்தா… அவங்க திரும்பி வரணும்னு நான் பிரார்த்திக்கிறேன்.”
தாத்தா சிரித்தார்.
“நீ இருக்கே… எனக்கு அது போதும்.”
ஆனால்… மீனாவுக்கு அது போதவில்லை.
அடுத்த நாள், தாத்தாவின் பழைய பொருட்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது,
அந்த பழைய பெட்டிக்குள் மஞ்சள் படிந்த ஒரு கடிதம் கிடைத்தது… அந்த கடிதத்தின் முகவரி
மீனா படிக்கும் அதே நகரம்.
(தொடரும்)
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
{{comments.comment}}