May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!

Su.tha Arivalagan
Apr 30, 2026,02:23 PM IST

- சிவ. ஆ.மலர்விழி ராஜா


மே தினம் அது

மேன்மை தரும் தினம்...... 


தேனீயின் உழைப்பு

தேனின்

இனிப்பு.......! 


கலைஞனின் உழைப்பு

அழகான

வடிவமைப்பு...... ! 


கவிஞர்கள் உழைப்பு

நல்ல வரிகளின்

தொகுப்பு..... ! 




கண்களின் உழைப்பு

காட்சிகள்

பிடிப்பு...... ! 


அலையின் உழைப்பு

கடலின்

சிறப்பு......! 


அருவியின் உழைப்பு

ஆனந்த 

களிப்பு....... ! 


மேகத்தின்  உழைப்பு

மழையின் 

மதிப்பு........! 


விருட்சத்தின் உழைப்பு

வெயிலின்

தவிர்ப்பு.....! 


தலைவனின் உழைப்பு

குடும்பத்தின் 

உயிர்ப்பு......! 


தாயின் உழைப்பு

குழந்தையின்

சிரிப்பு........ ! 


குழந்தைகள் உழைப்பு

தரமான கல்வி

படிப்பு......! 


வீரனின் உழைப்பு

தாய் மண்ணின் 

காப்பு.......! 


விவசாயிகள் உழைப்பு

விளைச்சலின் 

வனப்பு......! 


காவலர்கள் உழைப்பு

தீவினை

தடுப்பு.....! 


நீதியின் உழைப்பு

நலம் மிக்க  

தீர்ப்பு.......! 


தொழிலாளிகள்  உழைப்பு

இது மேதின

சிறப்பு.....! 


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)