அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
- மீனா கணேஷ்
எல்லோரும் எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா? நானும் சாப்டேன்... உங்களுடன் ஒரு அழகான தெய்வீக அனுபவத்தை பகிர்ந்துக்கத்தான் இப்ப வந்திருக்கேன்.
நேற்று ஆடி அமாவாசை என்பதால், சிவப்புச் சம்பா பச்சரிசியில் தான் வழக்கம்போல சாதம் செய்தோம். காகத்திற்குப் படைப்பதற்கும், விரதத்திற்குச் சாப்பிடுவதற்கும் அதைத்தான் பயன்படுத்துவோம். தைப் பொங்கல் போல இதை வாசலில் வைத்துப் பொங்க மாட்டோம்; சமையல் அடுப்பிலேயே வைத்துச் செய்து முடிப்போம்."
அதுக்கு சாம்பார், அவியல் அது இதுன்னு ரெடி பண்ணி, காலையிலேயே எல்லாம் பண்ணி வச்சு... பண்ணிட்டு ஒரு கோவிலுக்குப் போனோம். அந்த இடம் எங்கன்னா, அருகன்குளம். இது நெல்லை, தச்சநல்லூர் பைபாஸ் இருக்குல்ல, திருநெல்வேலியில இருந்து பார்த்தா தெரியும். கரெக்டா சொல்லணும்னா நாகர்கோவில் டூ சென்னை அந்த பைபாஸ் வந்து இங்க க்ராஸ் ஆகும்.
அது வழியா போனா, அருகன்குளம் ஊர் வரும். அங்குதான் இருக்கிறது ஜடாயு தீர்த்தம். ரொம்ப ஒரு புண்ணிய ஸ்தலம் அது. புஷ்கரணின்னு திருநெல்வேலியில நடந்துச்சு இல்லையா? இந்தப் பகுதியில்தான் அந்தப் புஷ்கரணி நடந்தது. அப்போது கூட இங்கு அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனால் புஷ்கரணிக்குப் பிறகு இந்த இடம் பிரபலமாகி விட்டது. இதனால் இங்கு கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்தது. நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது.
ஏன்னா, அருகன்குளம் குறித்து புண்ணியக் கதைகள் நிறைய இருக்கு. அந்த பூமியில நடந்த ஒரு வரலாறு எல்லாம் இருக்கு. அதனால ரொம்ப விசேஷமா சொல்லுவாங்க. இந்த புஷ்கரணிக்கு முன்னாடி கூட ஓரளவுதான் கூட்டம் வந்தது. ஆனால் நேத்து ரொம்ப கூட்டம்! மத்தியானத்துக்கு மேலதான் நாங்க போனோம்.. அப்படியும் கூட கூட்டம். வெளியூர்க்கூட்டம் அதிகமாக வந்தது.
அமாவாசை டைம் என்பதால், கார் பார்க்கிங்கிற்கே நேத்து ஒரு பெரிய கிரவுண்ட் எல்லாம் ஏற்பாடு பண்ணி வச்சிருக்காங்க. கிரவுண்ட் ஃபுல்லா வண்டிகள்தான்! எங்கிருந்து வராங்க, எப்படின்னு சொல்ல முடியாது. அவ்வளவு பேரு வராங்க... வேனு, காரு, பஸ், அது இதுன்னு.
சரி இந்த இடத்தோட கதையைச் சொல்றேன் கேளுங்க.. தசரதர் இறக்குற சமயம் ராமர் வந்து அவர் கூட இல்லை இல்லையா? அது முடிஞ்சி, அதுக்கு பிறகு சீதையை வந்து இலங்கைக்கு அவங்க போயிட்டாங்க. அவரு அந்த தகவல் தெரிஞ்சி இந்த இடத்துக்கு வர்றாரு.
இந்த இடத்துல, ஜடாயு வந்து ராவணன் கையால வெட்டுப்பட்டு, ராமர்கிட்ட அந்த தகவலை சொல்றதுக்காக இருந்த இடம். அப்படிப்பட்ட இடத்துக்கு ராமர் வர்றாரு, அப்போ காயப்பட்டுக் கிடக்கும் ஜடாயு, ராமர்கிட்ட வந்து தகவலை சொல்லிட்டு இறந்து போயிருது.
அந்த ஜடாயுக்கு கடைசி காரியங்கள் எல்லாம் செஞ்ச இடம்தான் இந்த ஆற்றங்கரை ஓரமா இருக்குது. அதுக்கு எல்லாம் பண்ணிட்டு, அதுக்கு மோட்சம் கொடுத்த இடம் அப்படிங்கறதுனால, இந்த திதி காரியங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த இடம் புண்ணியமானது.. அதனால்தான் இது விசேஷமானது என்று சொல்வாங்க.
அதே மாதிரி தீர்த்தங்களும் இருக்கு. ஜடாயு தீர்த்தம், ராமர் தீர்த்தம்... ரொம்ப புண்ணிய ஸ்தலம் இது. மறக்காமல் இந்த இடத்துக்கு நீங்களும் வாங்க.. சாமி கும்பிட்டுட்டுப் போங்க.
சரி மீண்டும் ஒரு நல்ல ஆன்மீக கருத்துடன் விரைவில் சந்திக்கிறேன்.. இப்போதைக்கு விடைபெறுகிறேன்.
(திருநெல்வேலியைச் சேர்ந்த மீனா கணேஷ், கவிஞர், சிந்தனையாளர், பாடகர் மற்றும் எழுத்தாளர்)