அன்பின் அடையாளம்.. ஆண்!

Su.tha Arivalagan
Dec 05, 2025,04:59 PM IST

- J. லீலாவதி


அன்பின் அடையாளம்

ஆண் 

அன்புக்கு பாத்திரம் ஆனவன்

ஆணவம் அறவே அறியாதவன்

இல்லத்தில் உள்ளோர்க்கு ஆறுதல் அவனே

ஈருயிரில் ஓர் உயிர் ஆனவன்

உழைப்பின் அடையாளம்

ஊதியம் மறைக்கத் தெரியாதவன் 




எண் எழுத்து ஏது அறிந்திருந்தாலும்

ஏளனமாய் எதையும் பார்க்காதவன்

ஐயம் ஏதும் அறியாதவன்

ஒன்றும் புரியாது நடித்தாலும்

யோசித்து எதையும் முடிவெடுப்பான்

அவ்வை வயதை எட்டியும் 

ஓய்வென்பதை அறியாதவன்

இருந்தும் இல்லத்தில் உள்ளோருக்கு 

ஆறுதலாய் தோள் கொடுக்கும் ஒரு தோழனாய் 

பிறர் கண்ணீருக்கு காரணம் அல்லாதவனாய் 

தான் பெற்ற செல்வங்களை உதறித் தள்ளாதவனாய் 

அவர்களை ஏற்றி விடும் ஏணியாய் 

தன்னை நம்பியவர்களிடம் நேரம் செலவிடுபவனாய் 

இருத்தல் எமக்கு போதுமே


(J. லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)