தமிழை என் உயிர் என்பேன்!
- மலைமலர் கி.மேனகா மோகன்தாஸ்
உயிரற்ற கல்லும் மண்ணும் பிறவா முன்னே
பிறந்த
உயிருள்ள உன் னதத் தமிழை.....
மொழிக்கு முன்னே
பாவங்களும்
பாவனைகளுமான
சைகைத் தமிழை......
எட்டுத் திசையும் பரவிய
பரவசத் தமிழை......
முத்தமிழும் சங்கமிக்கும்
சங்கத்தமிழை....
கடல் தாண்டி
மலை தாண்டி
கண்டம் தாண்டிய
தண்டமிழை....
எண்ணக்குவியலை
பண்ணாக்கிய
வண்ணக் காவியத்தமிழை...
திராவிட மொழிகளுக்கு
எல்லாம்
தாயானத் தமிழை.....
கல்வெட்டிலும்,
கணிப்பொறியிலும்
காலம் கடந்து
உலாவும் தமிழை....
கால மாற்றத்தை
வென்று நடை போடும்
இலக்கியத் தமிழை....
மரபு வடிவம் களைந்து
புது வடிவம் பெற்ற
புதுமைத் தமிழை.....
தமிழ்ப் புலவர்களின்
நாவில் பிறந்து விளையாடி...
அயலகப் புலவர்களிடம் ஆசையாக
புலம் பெயர்ந்த தமிழை.....
ஊழிகள் பல கடந்தும்
ஊண் உடம்பில்
உணர்வுகளை உயிர்ப்பூட்டிய
(கி.மேனகா B.A, B.Ed, M.A. கணவர் மோகன்தாஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஏற்காடு மலை நகரில் வசித்து வருகிறார். தமிழ் ஆசிரியர். கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் உடையவர்)