தமிழ் என் உயிர் என்பேன்!

Nov 26, 2026,04:49 PM IST

- அ. கலைவாணி


அ -வில் தொடங்கி அறம் வளர்த்தாய் 

என்னுள் அன்பெனும் விதை விதைத்தாய்


உன் கரம் பற்றி நடை பழகவைத்தாய்

கம்பனையும் கவி இயற்ற  வைத்தாய்

 

தொல்காப்பியனும் உன்னை புகழவைத்தாய்

அயலவரும் உன்னை நேசிக்க வைத்தாய் 


ஈராயிரம் ஆண்டுக்கு முன் பிறந்தாய் 

என்றும் இளமையுடன் கன்னியாய் திகழ்கிறாய்




ஔவைக்கும் ஆர்வத்தை ஊட்டிவிட்டாய்

வள்ளுவனையும் இன்றளவும் வாழவைத்தாய்


உயிரும் மெய்யும் உடையவளாம்

இயல் இசை நாடகம் என்ற அணிகலன் சூடியவளாம்


சாத்தனாரின் மேகலையும்

இளங்கோ அடிகளின் சிலம்பும் அணிந்தவளாம்


தொண்மைக்கு அகத்தியமாம்

புகழ்ச்சிக்கு புறநானுறாம்


உன்னை சுவைப்போருக்கு திகட்டா தேனாம்

என்றும் இளமை துள்ளும் அழகிய மானாம்


உன்னை கற்றோருக்கு ஊக்கம் தருபவளாம்

எங்களின் ஏக்கத்தை போக்குபவளாம்


ஔவியம் தான் அனைத்திற்கும் மேலான தூணாம்

நீ எங்கள் வானாம்


உன்னை என் தாய் என்பேன்

சேய் என்பேன் 


நீ தான் நீ மட்டும் தான் என் உயிர் என்பேன் 

என்றும் திகட்டாத என்மேலான சுவையூறும் செந்தமிழே!...


தமிழ் தான் என் உயிர் என்பேன்...


(அ. கலைவாணி. MA. B ED (Eng) பட்டதாரி ஆசிரியர், காமராஜர் தெரு, சேலம் -8)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"இது அறிவுலகமா? அல்லது ஊழல் உலகமா?": கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் காரசாரப் பேச்சு

news

ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாட்டில் முதல்முறையாக 15 நாட்கள் விடுப்பு அறிவிப்பு!

news

திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆளுநர் ஆர்லேகருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு –தமிழக அரசு மீது புகார்

news

ஆளுநரை சந்தித்த உதயநிதி : கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்

news

திருப்பரங்குன்றம் விவகாரம் : ஆட்சியை கலைக்க பாஜக மனு...தீபம் ஏற்றாததற்கு ஆட்சி கலைப்பு சாத்தியமா?

news

தமிழ் என் உயிர் என்பேன்!

news

அடுத்த தலைமுறைக்காக!

news

சாட்டையெடுத்து காட்டு.. தானாய் திருந்தட்டும்.. மதிகெட்ட செம்மறிக்கூட்டம்!

news

Paruppu Vadai: வெளியில் மழை பெய்யுதா.. கிச்சனுக்குள்ள வாங்க.. பருப்பு வடை செய்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்