ஆளுநரை சந்தித்த உதயநிதி : கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்

Nov 26, 2026,02:52 PM IST

சென்னை : தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக கவர்னர் அர்லேக்கரை சந்தித்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தமது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான கருத்தைப் பதிவு செய்துள்ளார். 


கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது, தமிழக சட்ட ஒழுங்கு ஆகிய விவகாரங்கள் குறித்து ஆளும் தவெக அரசுக்கு எதிராக தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து திமுக சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தை சிபிஐ.,க்கு மாற்ற வேண்டும், இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்ற குற்றத்திற்காக முதல்வர் விஜய் மற்றும் தலைமை செயலாளரையும் குற்றவாளியாக சேர்த்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் இந்த புகார் மனுவில் இடம்பெற்றிருந்தன. இந்த சந்திப்பு குறித்து, கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்.  


மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடந்த காலங்களில் ஆளுநர் பதவி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து திமுக முன்னெடுத்த நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளுநரை "தபால்காரர்" என விமர்சித்து மேடைகளில் பேசியவர்கள், இன்று அதே தபால்காரரிடம் மனு அல்லது தபால் கொடுக்க வரிசையில் நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிகாரம் கையில் இருந்தபோது ஆளுநர் பதவியின் தேவையைக் கேள்வி எழுப்பிய திமுக, இன்று பதவியை இழந்த நிலையில் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளதாக மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். 




உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணமும் செயல்பாடுகளும் ஆளுநர் வழியாகவும் பாஜக வழியாகவும் அமைந்துள்ளதாகத் தனது பதிவின் இறுதியில் அவர் விமர்சித்துள்ளார்.  ந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி வரும் நிலையில், கூட்டணி மற்றும் அரசியல் வட்டாரங்களில் இது பேசுபொருளாக மாறியுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு எதற்காக நிகழ்ந்தது, அதன் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடையே கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.   


இதற்கு முன்பு ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளும், அரசியல் விமர்சனங்களும் நினைவுகூரப்படும் சூழலில், மாணிக்கம் தாகூரின் இந்தப் பதிவு அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் இந்தச் சந்திப்பு குறித்து திமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அல்லது எதிர்வினைகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.   இந்த விவகாரம் தொடர்பாக மற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அந்த கூட்டணியில் இருந்து விலகி, தவெக உடன் இணைந்ததில் இருந்து திமுக.,விற்கு எதிராக தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. இந்நிலையில் ஆளுநருடனான திமுக.,வினரின் சந்திப்பையும் அவர்கள் விமர்சித்துள்ளது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாட்டில் முதல்முறையாக 15 நாட்கள் விடுப்பு அறிவிப்பு!

news

ஆளுநரை சந்தித்த உதயநிதி : கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்

news

திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆளுநர் ஆர்லேகருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு –தமிழக அரசு மீது புகார்

news

டிச.2-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கண்டனம்

news

ஹோபோனோபோனோ.. எண்ணம் போல் வாழ்க்கை (5)

news

தவெக எம்எல்ஏ விவகாரத்தில் முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க கவர்னரிடம் உதயநிதி மனு

news

சட்டப் போராட்டத்தின் முதல் அடி.. வேரில் இருந்து விழுது வரை (10)

news

இறைவன் புகழே இருள் நீக்கும் ஒளி.. திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (5)

news

சூர்யா.. ஒரு நிமிடக் கதை (66)

அதிகம் பார்க்கும் செய்திகள்